7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலம் இவர்களுக்கு பல வித நன்மைகளை கொண்டுவரவுள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசுகளை அளிக்க தயாராகி வருகின்றது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் மத்திய மோடி அரசு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. இது குறித்த விவாதம் வேகமாக நடந்து வருகின்றது. இந்த அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை இந்த மாதம் 3 அல்லது 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் ஊழியர்களுக்கு இது மிகப்பேரிய நிவாரணத்தை அளிக்கும். அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டல், மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டல், மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். டிஏ அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அளிக்கவில்லை. அரசாங்கம் இந்த அறிவிப்பை அளித்தவுடன் தான் அகவிலைபப்டி அதிகரிப்பு குறித்த தெளிவு நமக்கு கிடைக்கும்.
விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி (டிஏ) பரிசு வழங்கப்படும் என கருதப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் விதிகளின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டுகின்றது. அதே நேரத்தில், ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் டிஏ தோராயமாக நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்றே குறலாம். எனினும், இதுபற்றி அரசு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
அகவிலைப்படி அதிகரிப்புக்கு (DA Hike) மோடி அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என நம்பப்படுகின்றது. செப்டம்பர் 27, 2023 அன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள் மெற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. ஜனவரி 2023 முதல், ஊழியர்கள் 42 சதவீத டிஏவின் பலனைப் பெற்று வருகிறார்கள்.அதற்கு முன் 38 சதவுகிதமாக இருந்த டிஏ, ஜனவரியில் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 42 சதவிகிதம் ஆனது. இப்போது DA 4 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக நிர்ணயிக்கப்படும். அகவிலைப்படி அதிகரிப்பிற்கு பிறகு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கீழே உள்ள கணக்கீட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் இந்த அளவு உயர்வு இருக்கும் (46% டிஏ உயர்வு)
சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 18,000)
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ.8280/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 8280-7560= ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640
அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 56,900)
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ 26,174/மாதம்
3. இதுவரை அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 26,174-23,898= ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12 = ரூ 27312
மேலும் படிக்க | DR-DA Hike.. 4.5 லட்சம் ஊழியர்களுக்கு நற்செய்தி.. உடனே படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ