தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து, தாங்க முடியாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிசின் போலவே ஏசியும் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், கோடைக்காலத்தில் ஏசிகளை அதிக நேரம் பயன்படுத்தினால் மின் கட்டணங்கள் உயரும் அபாயமும் உள்ளது. பகல் மற்றும் இரவு என நீண்ட நேரம் ஏசியைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரக் கட்டணமும் அதிகமாகிறது. இந்நிலையில் நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தினாலும் மின்சார கட்டணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!
ஏசியை முடிந்தவரை ஆப் செய்யவும்: ஏசி பயன்பாட்டில் இல்லாத போது முடிந்தவரை அணைக்கவும். ரிமோட்டில் மட்டும் அணைப்பதற்கு பதிலாக சுவிட்ச் மூலம் ஆப் செய்வது நல்லது. பிரதான மூலத்திலிருந்து ஏசி ஆன் செய்யப்பட்டிருக்கும் போது, கம்ப்ரசர் ஆன் ஆக இருக்கும், இதனால் மின்சாரம் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே ஏசி சுவிட்சை ஆப் செய்வது நல்லது.
டைமரைப் பயன்படுத்தவும்: இரவு முழுவதும் ஏசியை ஓடடாமல் கூலிங் கிடைத்தவுடன் ஆப் செய்வது நல்லது. சில சமயங்களில் இரவு முழுவதும் ஏசி ஆனில் இருக்கும். இதனை தவிர்க்க டைமர் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது நல்லது. இரவு தூங்கும் போது இரண்டு முதல் மூன்று மணி நேரம் டைமரை செட் செய்வது நல்லது. இதனால் தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஏசி நின்றுவிடும். இதனால் அதிக நேரம் ஏசி ஓடுவது நிறுத்தப்பட்டு, கரண்ட் பில்லும் கம்மியாக வாய்ப்புள்ளது.
ஏசி மற்றும் மின்விசிறி: ஏசியும் மின்விசிறியும் ஒரே நேரத்தில் இயங்கும் போது, காற்று சுழற்சி அதிகமாக இருக்கும். ஏசி மற்றும் மின்விசிறியை ஒரே நேரத்தில் இயக்குவதால் அறையின் முழு இடத்தையும் சமமாக குளிர்விக்கவும், ஏசியின் சுமையைக் குறைக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகிறது. இதனால் நீண்ட நேரம் ஏசி இயக்குவதை தடுக்க முடியும்.
குறைந்த வெப்பநிலையை பராமரிக்கவும்: மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகும். அந்த வெப்பநிலையை அடைய எந்த ஏசிக்கும் குறைவான சுமை தேவைப்படும். எனவே 24 டிகிரி பாரன்ஹீட்டில் ஏசியை எப்போதும் பயன்படுத்துவது நல்லது. இதனால் பில் குறைவதுடன் அதிக மின்சாரமும் சேமிக்கப்படும்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்: ஏசியை பயன்படுத்தும் போது ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். குளிர்ந்த காற்று ஒரே இடத்தில் தங்கி வெளியேறாமல் இருக்கும் போது அறையை நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். கூடுதலாக, ஜன்னல் பகுதிகளில் துணிகளை வைத்து மூடுவது ஏசி வெளியேறாமல் பார்த்து கொள்ள உதவும். வெளிப்புற வெப்பம் ஏசிக்கு அறையை குளிர்விப்பதை கடினமாக்குகிறது, அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிக மின்சாரம் பயன்படுத்துகிறது.
அடிக்கடி சர்வீஸ் செய்யுங்கள்: ஏசியை வழக்கமான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வது அவசியம். ஏசியில் அதிகமாக தூசி படிந்தால் அதன் வேகம் மற்றும் செயல்திறன் குறையும். சரியான காற்றோட்டம் மற்றும் குளிர்ச்சியை உறுதிப்படுத்த, அடிக்கடி சர்வீஸ் செய்வது நல்லது.
5-ஸ்டார் ஏசி: வீட்டிற்கு ஏசி வாங்கும் போது 5-ஸ்டார் ஏசிகளை வாங்குவது நல்லது. இவற்றின் ஆற்றல் திறன் அதிகமாகவும், அதே சமயம் கூலிங்கும் அதிக அளவில் இருக்கும். விலையில் இவை அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு செலவுகளை குறைக்கும். குறைந்த மின்சார பயன்பாடு கரண்டு பில்லை கம்மி செய்யும்.
மேலும் படிக்க | இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ