Indian Railways: ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் கிடைக்குமா?

Indian Railways: பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2022, 03:45 PM IST
  • கோவிட் -19 பரவத் தொடங்கியது முதல், ரயில்வே பல சேவைகளை நிறுத்தியது.
  • நிலைமை தற்போது சீராகி வரும் நிலையில், தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது.
  • ஜூலை 1, 2022 முதல், மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் அளிக்கப்பட்ட விலக்கு மீண்டும் அளிக்கப்படும் என்று ஒரு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Indian Railways: ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் கிடைக்குமா? title=

இந்திய ரயில்வே: உலகளாவிய தொற்றுநோயான கோவிட் -19 பரவத் தொடங்கியது முதல், ரயில்வே பல சேவைகளை நிறுத்தியது. ஆனால், நிலைமை மீண்டும் தற்போது சீராகி வரும் நிலையில், தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. 

உதாரணமாக, பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எனினும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர்.  இது குறித்து பலமுறை செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்

கொரோனா வைரஸுக்கு முன்பு, மூத்த குடிமக்கள் ரயில்களில் டிக்கெட்டுகளில் தள்ளுபடியைப் பெற்றனர். அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை 1, 2022 முதல், மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் அளிக்கப்பட்ட விலக்கு மீண்டும் அளிக்கப்படும் என்று ஒரு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ஜூலை 1 முதல் ரயில்வே வெளியிட்டுள்ள புதிய முன்பதிவு விதிகள் 

ஆனால் இந்த செய்தி போலியான செய்தி என்று தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் இது வரை இது போன்ற எந்த அறிவிப்பும் ரயில்வேயால் வெளியிடப்படவில்லை. இதை விசாரித்த பிஐபி ஃபேக்ட் செக் ட்வீட் மூலம் இது குறித்து தகவல் அளித்துள்ளது.

பிஐபி தகவல் அளித்துள்ளது

பிஐபி ஃபாக்ட் செக் ட்வீட் செய்தது, 'இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ஜூலை 1, 2022 முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒரு போலி ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது, ​​மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே இந்திய ரயில்வேயில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.’ என தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அரசாங்கம் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், பயணிகளின் வசதியை அதிகரிக்க இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் தனது பல விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளது. இந்த மாற்றத்தின் பலனாக பயணிகளுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கப் போகின்றன. இந்த முறை மாற்றத்திற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நேரடியாகப் பொறுப்புகள் அளிக்கப்படும். அதன்படி ரயில் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அது அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | First Private Train of India: கோவையில் இருந்து ஷீரடிக்கு பயணித்த முதல் தனியார் ரயில் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News