மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. ரயில்வே வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு

நீங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்தியாவிற்குச் செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜைப் பார்க்கலாம். பேக்கேஜ் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 2, 2023, 07:18 PM IST
  • இவை பேக்கேஜில் சேர்க்கப்படும்.
  • பொது காப்பீடு மற்றும் கைட் போன்றவை அடங்கும்.
  • ஏழாவது நாள் அதிகாலையில் மீனாட்சியம்மன் கோயில் தரிசனம்.
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. ரயில்வே வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு title=

அவ்வப்போது, ​​ஐஆர்சிடிசி நாடு மற்றும் உலகின் பல்வேறு இடங்களைப் பார்வையிட பல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த முறை தென்னிந்தியாவின் ஆறு அழகிய இடங்களை ஆராயும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்தியாவிற்குச் செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜஜைப் பார்க்கலாம். அந்த பேக்கேஜின் பெயர் சவுத் இந்தியா டிவைன் டூர் பேக்கேஜ் எக்ஸ் டெல்லி. (South India Divine Tour Package Ex Delhi.) பேக்கேஜ் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த ஆறு இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு:
தென்னிந்திய டிவைன் டூர் பேக்கேஜில் (South India Divine Tour Package ) திருப்பதி, சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்களும் இந்த இடங்களுக்குச் செல்ல விரும்பினால், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பேக்கேஜில் முன்பதிவு செய்யலாம். நவம்பர் மாதத்தில், இந்த பேக்கேஜ் நவம்பர் 16 முதல் தொடங்கும், அதேசமயம் டிசம்பரில், இது டிசம்பர் 8 முதல் தொடங்கும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு வந்தாச்சி மெகா ஜாக்பாட் செய்தி.. 5% டிஏ ஹைக், டபுள் சம்பளம்

இதுவே முழுமையான அட்டவணை:
IRCTC இன் இந்த பேக்கேஜில், ரயிலுக்குப் பதிலாக விமானத்தின் வசதியான வகுப்பில் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். திட்டமிட்ட தேதியில் காலை 07:10 மணிக்கு விமானம் சென்னைக்கு புறப்படும். சென்னை வந்த பிறகு பயணிகள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். திருப்பதியில் உள்ள ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, பிற்பகலில் திருமலை திருப்பதி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பயணிகள் இரவில் விடுதியில் தங்குவார்கள்.

மறுநாள் காலை உணவுக்குப் பிறகு பத்மாவதி கோயிலுக்குச் செல்வீர்கள். அங்கிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி மதிய உணவு சாப்பிடுவீர்கள். மதிய உணவுக்குப் பிறகு காளஹஸ்தி கோயிலுக்குச் சென்றுவிட்டு, சென்னைக்குப் புறப்படுவீர்கள். சென்னையில் மட்டும் ஹோட்டலில் தங்குவீர்கள். மூன்றாம் நாள் காலை உணவுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்திற்குப் புறப்படுவீர்கள். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் செல்வீர்கள். ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, நீங்கள் ஒரு நாள் ஓய்வெடுப்பீர்கள். மாலையில் பயணிகள் அனைவரும் கோவளம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

நான்காம் நாள் காலை பத்மநாபசுவாமி கோயிலுக்குச் செல்வீர்கள். காலை உணவுக்குப் பிறகு, ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்துவிட்டு கன்னியாகுமரிக்குப் புறப்படுவீர்கள். கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டலில் செக்-இன் செய்வீர்கள். இதைத் தொடர்ந்து, விவேகானந்தர் பாறை நினைவகம், குமரி அம்மன் கோயில், சன்செட் பாயின்ட் ஆகியவை காண்பீர்க்கள. அதன் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பி இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்குவீர்கள்.

ஐந்தாம் நாள் காலை உணவுக்குப் பிறகு, பயணிகள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று விடுவார்கள். ராமேஸ்வரத்தை அடைந்ததும், தனுஷ்கோடி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதற்குப் பிறகு, ஹோட்டலில் செக்-இன், பின்னர் இரவு உணவு மற்றும் இரவு தங்குதல்.

ஆறாம் நாள் காலை ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்வீர்கள். அதன் பிறகு, மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பி, காலை உணவை சாப்பிட்டுவிட்டு, மதுரைக்குப் புறப்படுவீர்கள். வழியில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். மதுரையை அடைந்ததும் ஹோட்டலில் செக்-இன் செய்வீர்கள். மாலையில் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும். அங்குள்ள இடங்களை நீங்கள் ஆராயலாம். அதன் பிறகு இரவு உணவு மற்றும் இரவு விடுதியில் தங்குவீர்கள்.

ஏழாவது நாள் அதிகாலையில் மீனாட்சியம்மன் கோயில் தரிசனம். கோயிலில் இருந்து திரும்பியதும் ஹோட்டலில் காலை உணவு, அதன் பிறகு நீங்கள் விமான நிலையத்திற்கு அனுப்பப்படுவீர்கள். மாலை 05:35க்கு டெல்லி திரும்புவீர்கள்.

இவை பேக்கேஜில் சேர்க்கப்படும்:
இந்த பேக்கேஜிற்கு நீங்கள் கொடுக்கும் கட்டனம், விமான டிக்கெட், சுற்றி பார்க்க ஏசி வாகனம், மூன்று நட்சத்திர ஏசி அறை, திருப்பதி சிறப்பு நுழைவு கட்டணம், பத்மாவதி கோவில் தரிசன டிக்கெட் மற்றும் காளஹஸ்தி கோவில் தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும். இது தவிர, 6 காலை உணவுகள், 6 இரவு உணவுகள், பொது காப்பீடு மற்றும் கைட் போன்றவை அடங்கும். பேக்கேஜ் ரூ.51,140 முதல் தொடங்குகிறது. மேலும் விவரங்களுக்கு https://www.irctctourism.com/ என்ற இந்த லிங்கை கிளிக் செய்யலாம்.

மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News