ரயில்வே மாஸ் டூர் பேக்கேஜ்.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், உடனே படிக்கவும்

IRCTC Mata Vaishno Devi Package: ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜ் நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 7, 2023, 08:06 PM IST
  • இந்த ரயில் பயண பேக்கேஜ் மூன்று இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கானது.
  • நவம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் இருந்து டூர் பேக்கேஜ்கள் தொடங்கும்.
  • ஒருவருக்கு மட்டும் முன்பதிவு செய்தால் 10,395 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
ரயில்வே மாஸ் டூர் பேக்கேஜ்.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், உடனே படிக்கவும் title=

ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜின் முழு விவரம்: மிகவும் புனிதமான இந்து கோவில்களில் (Hindu Temples) ஒன்றான மாதா வைஷ்ணோ தேவியின் கோவில் சக்தி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாதா ராணி என்றும் வைஷ்ணவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயில் சுமார் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். எனவே நீங்களும் மற்றும் உங்கல் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் இந்த மாதம் மாதா வைஷ்ணோ தேவி (Mata Vaishno Devi Temple) கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜ்:

உண்மையில், ஐஆர்சிடிசி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) ஒரு ரயில் சுற்றுலாத் தொகுப்பை (IRCTC Train Tour Package) கொண்டு வந்துள்ளது, அதில் நீங்கள் மாதா வைஷ்ணோ (Vaishno Devi) தேவியை தரிசனம் செய்யலாம். ஐஆர்சிடிசியின் இந்த ரயில் டூர் பேக்கேஜின் பெயர் மாதா வைஷ்ணோ தேவி EX டெல்லி (வார நாள்) (NDR01) {MATA VAISHNODEVI EX DELHI (WEEKDAY) (NDR01)} ஆகும். மேலும் இந்த ரயில் பயண பேக்கேஜ் மூன்று இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கானது.

மேலும் படிக்க | கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கிய PNB, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

நவம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் இருந்து டூர் பேக்கேஜ்கள் தொடங்கும்:

இந்நிலையில் இந்த டூர் நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து இந்த மாதம் 12ஆம் தேதி அதாவது நவம்பர் 12ஆம் தேதி அன்று தொடங்கும். பயண முறை ரயிலில் இருக்கும், அதில் மூன்றாவது ஏசி (Third AC) டிக்கெட் இருக்கும். டூர் பேக்கேஜில் 2 இரவுகள் ரயிலிலும், 1 இரவு ஹோட்டலிலும் தங்கலாம். கட்ராவில் உள்ள ஏசி ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடுகள் இருக்கும். ஹோட்டல் தாஜ் விவாண்டா அல்லது இது போன்ற ஹோட்டலாக இருக்கும். உணவுத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், அதில் APAI மற்றும் காலை உணவு கிடைக்கும்.

டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:

இந்த ரயிலின் டூர் பேக்கேஜின் விலையைப் பற்றி பேசுகையில், ஒருவருக்கு மட்டும் முன்பதிவு செய்தால் 10,395 ரூபாய் செலவழிக்க வேண்டும். அதேசமயம், இரட்டைப் பங்கீட்டில் 7,855 ரூபாயும், மூன்று பேர் பங்கீட்டில் 6,795 ரூபாயும் செலவழிக்க வேண்டியிருக்கும். இது தவிர, ஐந்து வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, படுக்கையை எடுக்க, 6,160 ரூபாயும், படுக்கை எடுக்காமல் இருந்தால், 5,145 ரூபாயும் செலுத்த வேண்டும். நீங்கள் இந்த பேக்கேஜை முன்பதிவு செய்ய விரும்பினால் , ஐஆர்சிடிசியின் (irctctourism.com) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று எளிதாகப் பதிவு செய்யலாம்.

Class

 

Comfort

Occupancy

Prices(Per Person)

Single Occupancy

Rs. 10395/-

Double Occupancy

Rs. 7855/-

Triple Occupancy

Rs. 6795/-

Child(05-11 years) with bed

Rs. 6160/-

Child (05-11 years) without bed

Rs. 5145/-

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News