"லாக் டவுன்" ஆகும் இந்தியா.. மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள்

கொரோனோவுக்கு எதிரான பல நடவடிக்களை மத்திய, மாநில அரசுக்கள் எடுத்து வருவதால், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பல மாநிலங்களில் "லாக் டவுன்" உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2020, 07:03 AM IST
"லாக் டவுன்" ஆகும் இந்தியா.. மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள் title=

சென்னை: கொரோனோவுக்கு (Coronavirus) எதிரான இந்தியா போராட்டம் நடத்தி வருகிறது. ஆனாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் வசிப்பவர்கள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லாமல் இருக்க சமூகப் பரவலைத் தடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு உள்ளதால், ‘லாக் டவுன்’ என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்வதை காணலாம். 

ஒருவேளை உங்கள் மாநிலம் அல்லது நாடு முழுவதும் "லாக் டவுன்" செய்யப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்..!!

1. "லாக் டவுன்" (Lockdown) கட்டளைகள் தொற்று நோய் விதிகள், 2020 இன் படி, மாநிலங்களை பொறுத்து அதன் விதிகள் வேறுபடுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் வங்கிகள், ஏடிஎம்கள், மருத்துவமனைகள், காவல்துறை, நீர், மின்சாரம், ஊடகம், சுகாதாரம், நகராட்சி சேவைகள், பால் விற்பனை, மளிகை பொருட்கள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கின்றன. ஆன்லைன் சேவைகள் மற்றும் உணவுகளை வீட்டு விநியோகம் செய்யவும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் மாநில அரசுகள் தங்கள் சொந்த மதிப்பீட்டைப் பொறுத்து, சில மாநிலங்கள் குறிப்பிட்ட சேவைகளுக்கு விலக்கு அளித்துள்ளன.

2. தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றாலும், கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி லாக் டவுன் செய்யப்பட்ட 75 மாவட்டங்களில் இயக்கத் தடை விதிக்கப்படலாம். அது அரசின் முடிவை பொறுத்தே அமையும். மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பேருந்துகள், ரயில்கள் மற்றும் பெருநகரங்களை இணைக்கும் சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டு. நான்கு பேருக்கு அதிகமானோர் கூட தடை விதிக்கும் பிரிவு 144 பெரும்பாலான மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி உள்ளிட்ட பல அரசாங்கங்கள் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன. அதாவது அவசரநிலைகளுக்கு அல்லது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அத்தியாவசிய பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் உள்நாட்டு விமானங்கள் இயங்கும்.

3. மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் மருத்துவம், ATM-ல் பணம் எடுத்தல், மளிகைப் பொருட்கள் வாங்க, அவசரநிலையில் மருத்துவமனை செல்ல, உணவுப் பொருட்கள் வாங்க போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும். இருப்பினும், அவர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப் படுவதில்லை. குழுக்களாக பொது இடங்களைப் பார்வையிட அனுமதி இல்லை. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவார் என்று தெலுங்கானா மாநிலம் அறிவித்துள்ளது.

4. ஹவுஸ்சிங் சோசைட்டி அல்லது அப்பார்ட்மெண்ட் போன்ற வீட்டு குடியிருப்பில் வசிப்பவர்கள் உடற்பயிற்சி கூடங்கள், கிளப்புகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்ற வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் ஒரு குழுவாக நடந்து செல்லாமல், பாதுகாப்பான தூரத்தை கடை[கடைபிடித்து காலை நடைப்பயணங்களுக்கு செல்லலாம்.

5. "லாக் டவுன்" சமயத்தில் ஜிம்கள், பப்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பொது பொழுதுபோக்கு வசதிகள் போன்றவற்றை மூடாமல் "சமூக விலகல்" நடவடிக்கை மீறுவதற்கான தண்டனை விதிகள் பல மாநிலங்களில் வேறுபட்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பொழுதுபோக்கு வசதிகளை தொடர்ந்து இயக்குவதன் மூலம் மட்டுமல்லாமல், அதைப் பயன்படுத்துவது மூலமும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.

Trending News