PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) கூறுகையில், பைப் மூலம் சமையலறைக்கு வரும் பிஎன்ஜியின் விலை எஸ்சிஎம்முக்கு ரூ.5.85 உயர்த்தப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2022, 06:49 AM IST
  • PNG விலை உயர்வு
  • 5.85/SCM உயர்த்தப்பட்டுள்ளன
  • புதிய விலைகள் ஏப்ரல் 1 முதல் அமலானது
PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் title=

புதுடெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு எரிவாயு விலையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஜி.எல் விலையை உயர்த்துகிறது
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) கூறுகையில், பைப் மூலம் சமையலறைக்கு வரும் பிஎன்ஜியின் விலை எஸ்சிஎம்முக்கு ரூ.5.85 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலைகள் 01 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, தற்போது டெல்லி என்சிஆர் இல் பிஎன்ஜி விலை இன்று முதல் 41.71/எஸ்சிஎம் ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; இன்றைய விலை நிலவரம்.!!

சிஎன்ஜி விலையும் அதிகரித்துள்ளது
ஐஜிஎல் மூலம் தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை சிஎன்ஜி விலையும் கிலோவுக்கு 80 பைசா அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஜிஎல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிடி) சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.60.01ல் இருந்து ரூ.60.81 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டரும் விலை உயர்ந்தது
வெள்ளிக்கிழமை காலையிலேயே 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.250 உயர்த்தப்பட்டது. இதன் பிறகு டெல்லியில் இதன் விலை ரூ.2,253ஐ எட்டியது.

கடந்த 11 நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.40 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் பெட்ரோல் விலை நூறுகளை தாண்டியது.

மேலும் படிக்க | Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News