WOW...... இனி பான் கார்டு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கிடைக்கும்...

பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுஷில் சந்திரா தெரவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2018, 02:17 PM IST
WOW...... இனி பான் கார்டு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கிடைக்கும்...   title=

பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுஷில் சந்திரா தெரவித்துள்ளார்!

ஆதார் மற்றும் குடும்ப அட்டை போன்று தான் தற்போது பான் கார்டும். தற்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. இந்நிலையில், பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. 

வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் கொண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே பான் கார்டு அவசியம். 

இந்நிலையில், இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் விண்ணப்பதாரர் பான் கார்டு பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

வரிகளை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரித் தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தானியங்கி மயமாக்கல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். வருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பங்களும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் என்றும் சுசில் சந்திரா தெரிவித்தார். 2018 - 19 ஆம் நிதிண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் சுசில் சந்திரா  தெரிவித்தார். 

 

Trending News