LPG Gas cylinder Latest Update Tamil : தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் வீட்டு சமையலுக்கு எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்துகின்றனர். மூன்று வேளைகளிலும் சமைக்கும் மக்கள் அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்பிஜி சிலிண்டரை சிறிய கவனக்குறைவுடன் பயன்படுத்தினாலும் உயிரையே எடுத்துவிடும். அண்மையில் சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதற்கு காரணம் அவருடைய சிறிய கவனக்குறைவு என்பது தெரிந்தது. அதனால், எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தும் மக்கள் அதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் பாதுகாப்பான உபயோகம்
கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் எல்லோரும் கேஸ் அடுப்புகளின் காலாவதி தேதி, டியூப், ரெகுலேரட்டர் காலாவதி தேதி ஆகியவை குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்பிஜி சிலிண்டரில் இருக்கும் சுரக்ஷா ஹோஸை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அதில் இருந்து கேஸ் லீக்காக வாய்ப்பு இருக்கிறது. கேஸ் அடுப்பு மற்றும் ரெகுலேட்டரை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவை சரியாக செயல்படும் வரை மாற்றத்தேவையில்லை. ஒருவேளை கேஸ் அடுப்புகளை பயன்படுத்துவதில் உங்களுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யும் விநியோகிப்பாளரிடம் நேரடியாக சென்று அது குறித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதனை மறக்காதீங்க!
சிலிண்டர் லீக் உறுதி செய்வது அவசியம்
வீட்டுக்கு சிலிண்டர் விநியோகம் செய்ய வருபவரிடம் பாதுகாப்பாக சிலிண்டரை மாற்றிக் கொடுக்கவும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் அவர் சிலிண்டர் மாற்றி புதிய சிலிண்டரை பொறுத்தும்போது கேஸ் லீக் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொடுத்துவிடுவார். அவர் அப்படி செய்யவில்லை என்றால், அல்லது நீங்களும் கவனக்குறைவாக கேட்காமல் விட்டுவிட்டால் சிலிண்டர் லீக்காகி பெரிய விபத்தை சந்திக்க நேரிடும். எப்போது புதிய சிலிண்டரை மாற்றினாலும் கேஸ் லீக் ஆகிறதா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டெலிவரி மேன்களுக்கு காசு கொடுக்க வேண்டாம்
எப்போது புதிய சிலிண்டருக்கு புக் செய்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு டெலவரி செய்துவிட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உடனே சிலிண்டர் விநியோகிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை பெற்றுக் கொள்ளலாம். சிலிண்டர் விநியோகிக்க வரும் டெலிவரி மேன்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்டால் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இது குறித்து நீங்கள் நுகர்வோர் புகார் மையத்துக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிக்கலாம்.
சிலிண்டர் மானிய தொகை பெறுவது எப்படி?
மாதந்தோறும் புதிதாக வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியத்தொகை வருகிறதா? என்பதை வாடிக்கையாளராகிய நீங்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை மானிய தொகை வரவில்லை என்றால் ஆதார் எண், வங்கி கணக்கு எண் முறையாக இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை சிலிண்டர் டெலிவரி நிறுவனத்திடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போது, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி மானியம் முறையாக வருவதை உறுதி செய்து கொள்ளவும். சிலிண்டர்களுக்கு எப்போதும் சுரக்ஷா ஹோஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதில் குறைபாடு இருந்தால் புதிய ஹோஸ் வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | EPS Pension: வேலை பார்த்துக்கொண்டே ஓய்வூதியமும் பெற முடியுமா? EPFO விதி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ