இந்திய ரயில்வே: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஆபரேடிங் சிஸ்டத்தை (Train Operating System) மேம்படுத்தவும் அதிகரிக்கவும், மேம்பட்ட ரயில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தவும். இந்திய ரயில்வே ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய ரயில்வே இப்போது பயணிகளின் வசதிக்காக ரயில்களின் அப்ரேடிங் சிஸ்டத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் முன்முயற்சி காரணமாக, ஐஐடி டெல்லி ரயில்வேயின் ரன் ட்ரெயின் சாப்ட்வேரை புதுப்பித்துள்ளது. அதாவது, இப்போது ரயில்வே ஊழியர்கள் ரயில்களின் நிலை குறித்த சரியான தகவல்களைப் பெற முடியும். இது தவிர, இஸ்ரோவுடன் ரயில்வேயும் ரயில்களின் என்ஜின்களை மேம்படுத்துவதற்கான ஆயத்தங்களை முடித்துள்ளன.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
பயணிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வசதிகள்
1. இப்போது ரயில் பயணிகள், ரயில்கள் தாமதாகும் பிரச்சனை காரணமாக ரயிலுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
2. இப்போது ரயில்வே ஊழியர்கள் ரயில்களின் அனைத்து போகிகளின் தகவல்களையும் தங்கள் கணினித் திரையில் ஒரே கிளிக்கில் பார்க்க முடியும்.
3. இந்த மென்பொருளானது வினாடிக்கு ரயிலின் வேகத்தைக் கணக்கிட்டு, ரயில் எங்கு சென்றது, எந்த நிலையத்தில் எவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டது போன்ற துல்லியமாக சொல்ல முடியும்.
31 வருட பழைய மென்பொருள் மாற்றப்பட்டது
இந்திய ரயில்வேயில் இப்போது பயன்படுத்தப்படும் மென்பொருள் 1990 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. இப்போது, ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது அத்துடன் ரயில்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது இந்திய இரயில்வேயில் பயன்படுத்தப்படும் மென்பொருள் DAS அதாவது Disk Operating System முறைமையில் இயங்குகிறது. இதில், ரயில்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒன்றாக தொகுப்பது மிகவும் கடினமாக இருந்தது. எனவே இப்போது ரயில்களில் புதிய மென்பொருள் அமைப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.
நிகழ்நேர தகவல் அமைப்பு (Real-time information system) பலப்படுத்தப்படும்
இரண்டு வருடங்களுக்கு முன்பு, இரயில்வே அமைச்சகம், இஸ்ரோவுடன் இணைந்து, ரயில் என்ஜின்களை மேம்படுத்த ரியல்-டைம் ரயில் தகவல் அமைப்பின் கீழ் நவீன சாதனத்தை பொருத்தும் பணியைத் தொடங்கியது. மேலும் இதன் கீழ், இந்த தொழில்நுட்பம் இதுவரை 90 சதவீத இயந்திரங்களில் நிறுவப்பட்டுள்ளது. அதாவது, இப்போது அனைத்து திசைகளிலும் ஓடும் ரயில்களில் நிகழ்நேர அறிக்கை உங்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக, இப்போது பயணிகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் நேர அட்டவணை பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுகின்றனர்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் காரணமாக, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பனிமூட்டத்தின் போது மெதுவாக செல்லும் ரயில்கள் பற்றிய தகவலும் சரியான நேரத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும். குறிப்பாக ராஜ்தானி மற்றும் தேஜஸ் போன்ற ரயில்களில், இது பெரிய அளவில் உதவும்.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G