பான் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல்!

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் வருமான வரித்துறை அபராதம் விதிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 06:33 AM IST
  • பான் கார்டு ஒரு கட்டாய ஆவணம்
  • ஒரு தவறுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிகப்படலாம்
  • உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம்
பான் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல்! title=

புதுடெல்லி: பான் கார்டு சமீபத்திய செய்திகள்: இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணம். இது இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையையும் செய்வதற்கும் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் அவசியம். வங்கி முதல் அலுவலகம் வரை, அது இல்லாமல் எந்த நிதிப் பணியையும் செய்ய முடியாது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது முதல் அனைத்து இடங்களிலும் தற்போது பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதன் கடைசி தேதி 30 செப்டம்பர் 2021 ஆக இருந்தது, இது தற்போது 31 மார்ச் 2022 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், பான் கார்டு தொடர்பான தவறுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் 

இரண்டு அட்டைகளை வைத்திருப்பது இந்த பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்
இந்தியாவின் மிக முக்கியமான நிதி, அடையாள ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண். அதன்படி பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் உள்ளன. ஆனால் விதிகளின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்களுக்கு அனுமதி கிடையாது. எனவே வருமான வரி சட்டம் பிரிவு 272பி -இன் கீழ், ஒருவரிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உங்கள் இரண்டாவது பான் கார்டை எவ்வாறு ஒப்படைப்பது
* பான் ஐ சரணடையும் செயல்முறை எளிதானது. இதற்கு ஒரு பொதுவான படிவம் உள்ளது, அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.
* இதற்கு, நீங்கள் வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவும்.
* இப்போது 'புதிய பான் கார்டு அல்லது/ மற்றும் பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தத்திற்கான கோரிக்கை' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* படிவத்தை இப்போது பதிவிறக்கவும்.
* இப்போது படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஏதேனும் என்.எஸ்.டி.எல் அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கவும்.
* இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கும் போது, ​​அதைப் படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
* இதை ஆன்லைனிலும் செய்யலாம்.

ஒரே முகவரியில் உள்ள ஒரே நபரின் பெயரில் உள்ள இரண்டு வெவ்வேறு பான் கார்டுகள் இந்த வகையின் கீழ் வரும். உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை சரண்டர் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News