Saving And Investing In SIP: தற்போதைய சூழலில் பணவீக்கம் அதிகரித்துள்ள விதத்தின்படி, 100 ரூபாயின் மதிப்பு பெரியதாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்றைய காலக்கட்டத்தில், கடைக்குச் சென்று சிறிய பொருட்களை வாங்கினால் கூட, 100 ரூபாய் எளிதில் செலவாகிவிடுகிறது.
ஆனால், 100 ரூபாய் என்ற இந்தத் தொகையை தினமும் ஏதாவது ஒரு வகையில் சேமித்து வைக்க முயன்றால், சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சேர்த்து, விரைவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆம், ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாய் சேமிப்பதன் மூலம், சில வருடங்களில் நீங்கள் விலையுயர்ந்த காரை வாங்குவதற்கு கூட போதுமான பணத்தைச் சேகரிக்கலாம், அதுகுறித்து இங்கு தெளிவாக காண்போம்.
SIP சிறந்த திட்டம்
நீங்கள் ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் சேமிக்கத் தொடங்கினால், இந்த வழியில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாயை மிகவும் வசதியாக சேமிக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 ஆயிரம் ரூபாயை நீங்கள் எந்த இடத்திலும் முதலீடு செய்யலாம். இன்றைய காலகட்டத்தில், நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த திட்டமாக SIP கருதப்படுகிறது. SIP மூலம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். மியூச்சுல் ஃபண்ட் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் நீண்ட கால முதலீட்டில் சராசரியாக 12% வருமானம் கிடைக்கிறது, இது இன்றைய காலகட்டத்தில் மற்ற எந்த திட்டத்தையும் விட சிறந்தது என கூறலாம். zeenews.india.com/tamil/lifestyle/how-to-become-rich-quickly-follow-these-tips-in-tamil-452003
மேலும் படிக்க | Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்
15 வருடங்களில் எவ்வளவு வருமானம் வரும்?
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் நீங்கள் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். ஆனால் 12 சதவீத வட்டியால் உங்களுக்கு இரண்டு மடங்கு வருமானமும் கிடைக்கும். 15 ஆண்டுகளில் 12 சதவீத வட்டியின் படி, உங்களுக்கு 9 லட்சத்து 73 ஆயிரத்து 728 ரூபாய் வட்டி கிடைக்கும்.
இதன்மூலம், நீங்கள் முதலீடு செய்த பணம் மற்றும் வட்டியில் பெறப்பட்ட தொகை உட்பட மொத்தம் 15 லட்சத்து 13 ஆயிரத்து 728 கிடைக்கும். இது தவிர, இன்னும் 5 வருடங்கள் தொடர்ந்தால், அதாவது 20 வருடங்கள் SIP-யில் ரூ.3,000 முதலீடு செய்து கொண்டே இருந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 29 லட்சத்து 97 ஆயிர்துத 444 ரூபாய் கிடைக்கும். அந்த பணத்தை வைத்து எந்த விலையுயர்ந்த காரையும் எளிதில் வாங்கக்கூடிய தொகை இதுவாக இருக்கும். அதாவது, இதனை மிகவும் இளம் வயதிலேயே செய்வது நல்லதாகும்.
எப்படி சேமிப்பது?
இப்போது தினமும் 100 ரூபாய் சேமிப்பது எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்நிலையில், நிதி ஆலோசகர் தீப்தி பார்கவா கூறுகையில், "ஒவ்வொரு நபரும் தனது மொத்த வருமானத்தில் 20 சதவீதத்தை எப்படி வேண்டுமானாலும் சேமிக்க வேண்டும் என்பது நிதி விதி. மாதம் ரூ.20,000 சம்பாதித்தாலும், 20 சதவீதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.4,000 சேமிக்க வேண்டும். தினமும் 100 ரூபாய் சேமித்தால், அதுவும் 3,000 ரூபாய்தான். அத்தகைய சூழ்நிலையில், சிறிய சம்பளம் வாங்குபவர்களுக்கு கூட 3,000 ரூபாய் சேமிப்பது மிகவும் கடினம் அல்ல. அவர் தனது செலவுகளில் சிலவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | குட் நியூஸ்! இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு டபுள் ஜாக்பாட், உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ