ரயில் பயணிகளுக்கு இலவச உணவு... மூன்று வேளைக்கும் பெறலாம் - இதை மறக்காதீர்கள்!

Indian Railway Latest Update: ரயில்வே துறை பயணிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இருப்பினும், சில சேவைகள் குறித்து பலருக்கு பரிட்சயம் இருக்காது. அந்த வகையில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 5, 2023, 09:11 PM IST
  • இது புதிய விதிமுறைகளின்படி கொண்டுவரப்பட்டுள்ளது.
  • நீங்கள் தண்ணீருக்குக் கூட பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
ரயில் பயணிகளுக்கு இலவச உணவு... மூன்று வேளைக்கும் பெறலாம் - இதை மறக்காதீர்கள்! title=

Indian Railway Latest Update: நீங்கள் ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் என்றால், இதை நீங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ரயிலில் போகும்போது, ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலில் விற்கப்படுவதையோ வாங்கி சாப்பிடுவதுதான் பலருக்கு வழக்கம். ஆனால், பயணிகளான நீங்கள் இலவசமாக உணவை பெறலாம். 

ஆம்... புதிய விதியின்படி ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு விதிமுறை மட்டும் உள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம். 

தண்ணீருக்குக் கூட பணம் செலவழிக்க வேண்டியதில்லை

நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், ரயில்வே வழங்கும் இலவச உணவுடன் குளிர் பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போதுதான் மட்டும்தான் இந்த சேவை வழங்கப்படும்.

ரயில் தாமதமாக வந்தால், ரயில்வே மூலம் இலவச உணவு வழங்கப்படும். ரயில்வேயின் இத்தகைய வசதிகளை நீங்கள் எளிதாக அனுபவிக்க முடியும். இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதம் ஏற்பட்டால் ரயில்வேயின் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷனில் இனி இந்த வேலையை செய்தால் ஃபைன் கட்டனும், எச்சரிக்கும் அரசு

இந்த வசதி எப்போது கிடைக்கும் தெரியுமா?

ரயில்வே விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச உணவு வசதி வழங்கப்படுகிறது. உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். https://zeenews.india.com/tamil/india/railway-budget-2023-indian-railway...

தயங்கவே வேண்டாம்

ரயிலின் காலை உணவில் டீ/காபி மற்றும் பிஸ்கட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மாலையில் சிற்றுண்டி உணவு, டீ/காபி மற்றும் நான்கு ரொட்டி துண்டுகள் (கோதுமை/மைதா), சிறிது வெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது தவிர, மதியம் பயணிகளுக்கு ரொட்டி, பருப்பு, காய்கறிகள் போன்றவை இலவசமாக கிடைக்கும். 

உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக இருந்தால், விதிகளின்படி இதுபோன்று உணவை ஆர்டர் செய்து இலவசமாக பெறலாம். இந்த சேவையை  பயன்படுத்த தயங்கவே தேவையில்லை. நீங்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான 2 மணிநேரத்தை இந்த ரயில் தாமதத்திற்காக செலவு செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்து இந்த சேவையை பெற்றுக்கொள்ளவும். 

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுடன், இனி இந்த விஷயமும் இலவசமாகக் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News