இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன?

Gold Investment News: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் வேளையில், தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா என பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கு வல்லுநர்களின் பதிலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 26, 2024, 03:10 PM IST
  • தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது.
  • இதனால் தொடர்ந்து தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது.
  • கிராமுக்கு கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.135 ரூபாய் குறைந்துள்ளது.
இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன? title=

Gold Investment News In Tamil: வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் பெறும் வருமானம்தான் உங்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் முக்கிய காரணி. நீங்கள் பணம் சம்பாதிக்கும் போதுதான் உங்களால் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட முடியும். பணம் சம்பாதிப்பது முக்கியம் என்றாலும், அந்த வருமானத்தை சேமிப்பதும் சரியாக முதலீடும் செய்வதும்தான் அவசியமானது. 

சேமிப்பு, முதலீடு என்றவுடன் பயப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம். உங்களுக்கு வரும் வருமானத்தில் மிக மிக குறைவான ஒரு பகுதியை சேமித்து வைப்பது நிச்சயம் ஆபத்து காலத்தில் கைக்கொடுக்கும். நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாலும் சரி, 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாதலும் சரி நீங்கள் குறைந்தபட்சம் 5%-10% சேமித்து வைக்க முயற்சியுங்கள்.

குறையாத தங்கத்தின் மீதான மோகம்

சேமிப்புகளுக்கு பல வழிகள் உள்ளன. சேமிப்புகளை நீங்கள் முதலீடாகவும் செய்துவைத்துக் கொள்ளலாம். அதிலும் சிறந்த முதலீடு என்பது தங்கம்தான். தங்கத்தில் சேமித்துவைப்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. நடுத்தர குடும்பத்தினரின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்றே தங்கம் வாங்கி வைத்துக்கொள்வதாகும். வாங்கிக் வைக்கும் தங்கத்தை பூட்டிவைத்துக்கொள்ளாமல் அதனை தங்களின் தேவைக்கு அடகு வைத்து, தங்க நகைக்கடனையை பெற்றுக்கொள்வார்கள்.

மேலும் படிக்க | ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை

தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயர்ந்துகொண்டே இருப்பதே தங்கத்தை அதிகம் வாங்குவதற்கான முக்கிய காரணம். நிலம், பங்குச்சந்தைகள் ஆகியவற்றில் கிடைக்கும் லாபம் என்பது தங்கத்தை விட அதிகம் என்றாலும், அவற்றை விட தங்கத்தில் ரிஸ்க் மிக மிக குறைவு. தங்கத்தை நீங்கள் எங்க விற்றாலும் அதன் மதிப்பு அதிகமாகவே இருக்கும். எனவேதான், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் இத்தனை ஆண்டுகளில் ஒரு துளி கூட குறையவில்லை. 

சுங்க வரி குறைப்பு

அப்பேற்பட்ட தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்து வருவதையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கம் மீதான சுங்க வரியை 14.35 சதவீதத்தில் இருந்து 6.35 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியானது. இதனால், பட்ஜெட் வெளியான அன்றே தங்கத்தின் விலை கடுமையாக  சரிந்தது. 

தொடர்ந்து, கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் இன்று வரை மட்டும் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 135 ரூபாய் குறைந்திருக்கிறது. மேலும், தற்போது ஒரு கிராம் தங்கம் 6,870 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா அல்லது தங்கம் விலை இன்னும் கடுமையான சரிவை சந்திக்குமா, இப்போது இல்லை என்றால் எப்போது தங்களம் வாங்கலாம் என்ற கேள்விகளும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஏன் இப்போது தங்கம் வாங்க வேண்டும்?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் வல்லுநர்கள் தங்களின் பார்வைகளை முன்வைத்துள்ளனர். இப்போது தங்கம் வாங்கலாமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பலரும், தயங்காமல் இப்போதே வாங்குங்கள் என்கின்றனர். இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 900 ரூபாய் வரை குறைந்திருக்கிறது என்றும் இன்னும் கொஞ்ச நாள்களில் பண்டிகை தினங்கள் வர இருப்பதால் இப்போதைய சூழலை பயன்படுத்தி உடனே தங்கம் வாங்குவது நல்லது என்றும் கூறுகின்றனர். மேலும், விலை குறைந்திருப்பது மக்களுக்கே அதிகம் பயனளிக்கும். இந்த வாய்ப்பை தவறவிடவே கூடாது என்கின்றனர். 

விலை குறைந்திருப்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகும். நகை வாங்குவது உள்ளிபட்ட தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் சரி, முதலீட்டிற்கும் சரி அதிகமானோர் தங்கம் வாங்க முன்வருகிறார். சுங்கவரி குறைப்பு மட்டுமின்றி, சர்வதேச அரசியல் மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணவோட்டம் ஆகியவற்றை பொருத்தும் தங்கத்தின் விலை மேலும் சற்று  குறையலாம் என்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக எழுதப்பட்டது. முதலீடு செய்யும் முன் சந்தை ஆலோசகரிடம் முறையான ஆலோசனையை பெறவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News