How To Vote Without Voter ID in Lok Sabha Elections 2024: 2024 மக்களவை தேர்தலுக்கு இந்தியா தயார் ஆகி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பதை தீர்மானிக்கு தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் உள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம், ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டம், மே 7-ம் தேதி 3-ம் கட்டம், மே 13-ம் தேதி நான்காம் கட்டம், மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25-ம் தேதி ஆறாம் கட்டம், ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்டம் என 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, உத்தரகண்ட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் தொடங்குகிறது.
Follow these simple steps,from verifying your name in the Electoral roll to casting your vote at polling stations.
Watch this step-by-step video guide.#LokSabhaElections2024 #ECI #ChunavKaParv #DeshKaGarv #Elections2024 pic.twitter.com/0rH8O1KWyC
— Election Commission of India (@ECISVEEP) April 4, 2024
மக்களவை தேர்தல், மாநில சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்தவகையான தேர்தலாக இருந்தாலும், வாக்களிப்பது மிகவும் முக்கியம். இது மக்களின் இரு ஜனநாயக கடமை ஆகும். தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வைத்திருப்பது முக்கியம். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தகவலின்படி, நீங்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால் உங்களது பெயர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். அந்த பட்டியலில் உங்களது பெயர் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் உங்களால் வாக்கு செலுத்த முடியும்.
வாக்காளர் பட்டியலில் பெயரை எப்படி சேர்ப்பது?
வாக்களிக்க முதலில் தேவையான அடிப்படை விதி, நீங்கள் 18 வயதை தாண்டி இருக்க வேண்டும். ஜனவரி 1ஆம் தேதிக்குள் 18 வயது நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் போது பாஸ்போர்ட் அளவிலான வண்ணப் புகைப்படத்தை கொடுக்க வேண்டும். மேலும், உங்களுக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதை உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன், உங்களது ஆதார் அட்டை, பாஸ்புக், முகவரி சான்று ஆகிவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் பொது வாக்காளராக இருந்தால், ஆன்லைன் படிவம் 6ஐ நிரப்ப வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் படிவம் 6A நிரப்ப வேண்டும். படிவத்தில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும். பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து கொள்ளலலாம்.
மேலும் படிக்க | 'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ