உங்கள் கார் கடன் EMI-களை குறைப்பதற்கான வழிகள்!

கார் கடன் பெற்றவர்கள் வட்டி விகிதங்களின் சுமையைக் குறைக்க ஒரு நியாயமான தொகையை முன்கூட்டியே செலுத்துவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 26, 2022, 06:56 AM IST
  • ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பார்கள்.
  • கார்களின் விலைகளும் வெவ்வேறு விதமாக இருக்கும்.
  • பெரும்பாலான மக்கள் கார் கடன்களை பெற்று கார்களை வாங்குகின்றனர்.
உங்கள் கார் கடன் EMI-களை குறைப்பதற்கான வழிகள்! title=

பலருக்கும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பார்கள்.  கார்களின் விலைகளும் வெவ்வேறு விதமாக இருக்கும், பொதுவாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பது கார் கடன்கள் தான்.  பெரும்பாலான மக்கள் கார் கடன்களை பெற்று தான் அவர்களுக்கு விருப்பமான கார்களை வாங்குகின்றனர், பின்னர் தவணை முறையில் காருக்கான கடன் தொகையை திருப்பி செலுத்துகின்றனர்.  மாதந்தோறும் அதிகளவிலான இஎம்ஐ தொகையை செலுத்துவது நமக்கு சில சமயம் நிதி சிக்கல்களை ஏற்படுத்திவிடும் அதனால் நாம் சில வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த அளவிலான இஎம்ஐ தொகையை பெறலாம். 

மேலும் படிக்க | Ration Card:இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக், சர்க்கரை கூட கிடைப்பதில்லையாம்

 

1) கடன் பெற்று கார் வாங்குபவர்கள் அதிக முன்பணம் செலுத்துவதன் மூலம் அவர்களின் இஎம்ஐ தொகையானது கணிசமாக குறையும், இதன்மூலம் உங்கள் கடன் தொகையும் குறைக்கும்.  உங்களது கடன் தொகை குறைவாக இருப்பதால் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியின் அளவும் குறைவாகவே இருக்கும், வட்டி விகிதங்களின் சுமையைக் குறைக்க ஒரு நியாயமான தொகையை முன்கூட்டியே செலுத்துவது நல்லது. 

2) நீங்கள் வாங்க விரும்பும் கார் உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் இருக்குமா என்பதை சரிபார்த்து கொள்வது அவசியம்.  ஒரு காரை மட்டுமே தேர்வு செய்யாமல் வெவ்வேறு கார்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  முடிந்தவரை ஆடம்பரமாக செலவு செய்து கார் வாங்குவதற்கு பதிலாக விலை மலிவானதாகவும் அதே சமயம் சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ள காரை வாங்குவது உங்களது இஎம்ஐ தொகையின் சுமையை குறைக்க உதவும்.

3) கடன் வழங்குபவர்கள் பல்வேறு வகையான தவணைக்கால ஆப்ஷன்களை உங்களுக்கு வழங்குவார்கள், அதில் நீங்கள் நீண்ட காலத்திற்கு செலுத்தும் தவணை முறையை தேர்தெடுப்பது கடன் சுமையை குறைக்கும். அதேசமயம் இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது, தவணை காலம் நீந்தல் வட்டி விகிதம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதையெல்லாம் கவனித்து அதன் பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது, உங்களின் நிதி நிலையை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செயல்படுவது சிறந்தது.

4) மற்ற இடங்களை காட்டிலும் நீங்கள் வங்கிகளின் மூலம் காருக்கு கடன் பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது, நீங்கள் நீண்ட காலமாக நல்லதொரு உறவை கொண்டிருக்கும் வங்கியிடமிருந்து கடன் பெறுவது நன்மையை அளிக்கிறது.  ஏனெனில் அவை உங்களுக்கு சில நல்ல சலுகைகளை வழங்குகிறது, மேலும் அவர்கள் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தொகையையும் வழங்க நேரிடும்.

5) பெரும்பாலான வங்கிகள் மற்றும் என்பிஎப்சி-கள் உங்களை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே கடன் தொகையை செலுத்த கூறுகிறது.  அதனால் கடன் வாங்குபவர்கள் போனஸ் செக்குகள் அல்லது பிற விண்ட்ஃபால்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் உங்களுக்கு தேவையற்ற வட்டி விதிக்கப்படுவது நல்லது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! இனி இந்த போன்களில் வாட்சப் வேலை செய்யாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News