Prevent Suicide : இந்தியாவில் இப்போது தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பை அடல் சேது பாலத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னொரு பெண்ணும் அதே இடத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். நல்ல வேளையாக அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணின் உயிரை போலீசார் உதவியுடன் காப்பாற்றினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், தற்கொலை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்கொலையை தடுப்பது எப்படி?
தற்கொலை என்பது ஒருவர் தனக்கு அளித்துக் கொள்ளும் உட்சபட்ச தண்டனை. இந்த முடிவை ஒருவர் எடுக்க பல காரண காரணிகள் இருக்கின்றன. இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நம்மை சுற்றியுள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தாலே இதற்கு போதுமானது. அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும். இதுதவிர இன்னும் சில விஷயங்களை செய்தால் நம்முடன் வாழ்ந்த ஒருவரின் உயிரை காப்பாற்றலாம்.
1. உணர்வுகளை புறக்கணிக்க வேண்டாம்
நம் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் நடத்தை மற்றும் முகபாவனைகளை கவனிக்க வேண்டும். ஒரு நபர் சோகமாகவோ, ஏமாற்றமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருப்பதுபோல் உங்களுக்கு தோன்றினால் அவரது உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். அவர்களுடைய பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவருடன் உரையாடுங்கள். அவர் என்ன நினைக்கிறார் என்பதை காது கொடுத்து பொறுமையாக கேட்கவும். ஒரு நபர், வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து, தற்கொலை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை கவனமாகக் கேட்டு அவருக்கு ஆதரவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | இந்த 5 சைலண்ட் சிக்னல்கள்... அவர் உங்களை காதலிக்க அதிக வாய்ப்புள்ளது!
2. உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
நீங்கள் தற்கொலை எண்ணத்தில் இருப்பவருடன் உரையாடும்போது, என்ன தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கிறயா? என வெளிப்படையாக கேளுங்கள். அந்த கேள்வியை கேட்க நீங்கள் பயப்பட வேண்டாம். அப்படி கேட்கும்போது அவர்களின் உண்மையான பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்வார்கள். அப்போது, அவர்களின் எண்ண ஓட்டம், பிரச்சனையின் தீவிரம், எதனால் பிரச்சனை வருகிறது என்ற விவரங்கள் எல்லாம் உங்களிடம் அவர்களே சொல்லிவிடுவார்கள்.
3. ஆலோசனை வழங்கவும்
அவர்களின் பேச்சை முழுமையாக கேட்டுக் கொண்ட பிறகு நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள். அத்துடன் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கிறது என்பதையும், அதனை எப்படி சமாளிக்கலாம் என்ற விவரங்களையும் சொல்லுங்கள். சிலபல வாழ்க்கை உதாரணங்கள் ஏதேனும் இருந்தால் அதனை அவர்களுக்கு சொல்லுங்கள். உங்களால் முடிந்தால் போதுமான நேரத்தை தற்கொலை எண்ணத்தில் இருக்கும் அந்த நபருடன் செலவிடுங்கள். நேர்மறையான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். வாழ்க்கையில் நடந்த பல நல்ல விஷயங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.
4. நிதி உதவி
தற்கொலை பாதையை தேர்வு செய்கிற பலருக்கும் இருக்கும் பிரச்சனை நிதி நெருக்கடி. அத்தகைய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் முடிந்தவரை நிதி உதவி செய்வது முக்கியம். உங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய நிதி உதவி ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் அவர்களுக்கு நீங்கள் இந்த உதவியை செய்வது கடமை என்று எண்ணுங்கள்.
5. சமூக ஆதரவு
வேலை இழப்பு மற்றும் தொழிலில் ஏற்பட்ட தோல்வியால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள பலர் முயற்சிப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு தோல்வி அவரது விதியை மாற்றாது, வாழ்க்கையில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதை விளக்குவது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் பொறுப்பாகும்.
மேலும் படிக்க | கல்யாணமான ஆண்களுக்கு வரும் ஆசை.. மனைவிகளுக்கு ஷாக் கொடுக்கும் ஆய்வு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ