குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!

How To Prevent Skin Dryness : பலருக்கு குளிர் காலம் வந்தாலே சருமம் வரண்டு பாேகும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 9, 2024, 02:25 PM IST
  • பணிக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி
  • சருமத்தை வறட்சி அடைய செய்யாமல் எப்படி தடுப்பது?
  • இதோ ஈசியான டிப்ஸ்!
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்! title=

How To Prevent Skin Dryness : குளிர் காலத்தில் மக்களை தாக்குவதற்கென்றே பல்வேறு பிரச்சனைகள் காத்துக்கொண்டிருக்கும். சளி, இருமல், உடற்சோர்வு, காயச்சல் போன்றவை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சரும வறட்சி, சருமம் காய்ந்து போகுதல் வெள்ளை வெள்யைாக ஆங்காங்கே தேம்பல் தெரிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை தவிர்க்க என்னென்ன செய்யலாம் தெரியுமா? 

மாய்ஸ்ட்ரைசர்:
 
உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ட்ரைசரை தேர்வு செய்து அதை, வறட்சி மிக்க பகுதிகள் மட்டுமன்றி முகம், கை-கால்கள் என அனைத்து இடங்களிலும் தேய்க்க வேண்டும். குளித்து முடித்தவுடன் அல்லது முகம் கழுவி முடித்தவுடன் தண்ணீர் இல்லாமல் நன்றாக முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்ட்ரைசரை தடவ வேண்டும்.
 
கிளன்சர்:
 
குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மேலும் வறட்சி அடைய செய்யும் கெமிக்கல் கொண்ட சோப்புகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் முகத்திற்கு ஏற்ற நீர்ச்சத்து தரும் ஃபேஸ் வாஷை உபயோகிக்கலாம். இதன் பிறகு மாய்ஸ்ரைசர் தீர்த்து அதற்கு மேல் கிளன்சர் உபயோகிக்கலாம். அது இலகுவாக இருந்தால் இன்னும் சிறப்பு. 
 
சுடு தண்ணீரில் குளிக்க வேண்டாம்: 
 
குளிர் காலத்தில் நம்மால் சாதாரண நீரில் குளிப்பது பல சமயங்களையும் இயலாத காரியமாக இருக்கும். அப்படி உடலுக்கு வெண்ணீர் வைத்து குளித்தாலும், முகத்திற்கு மிதமான சூடு கொண்ட நீர் அல்லது சாதாரண தண்ணீர் வைத்து உபயோகிக்கவும். சுடு தண்ணீரில் முழுமையாக கொடுத்தாலும் கடைசியில் வரும்போது சாதாரண தண்ணீரை மேலே ஊத்திக் கொள்ளலாம். சுடு தண்ணீர் வறண்டு போன நம் சருமத்தை முன் வறட்சி பெற செய்து என கூறப்படுகிறது. 
 
கிளவுஸ்-மாஸ்க் அணியலாம்:
 
வெளியே செல்லும்போது குளிரிலிருந்து அல்லது பணியில் இருந்து உங்கள் சருமத்தை தற்காத்துக் கொள்ள கிளவுஸ் மற்றும் மாஸ்க் அணியலாம். இதனால் சரும துளைகளை நாம் பாதுகாப்பதோடு பணியினால் சருமம் வறண்டு போகாமலும் இருக்கும். 
 
தண்ணீர் குடிப்பது: 
 
மழைக்காலங்கள் மற்றும் பனி பொழியும் காலங்களில் நமக்கு தாகமே மிகவும் கம்மியாகத்தான் எடுக்கும். இதனால் மிகவும் குறைவான அல்லது தண்ணீர் குடிப்போம். நன்கு தண்ணீர் குடிப்பதால் உதடு வறட்சி ஆகாமல், சருமம் வறட்சியாகாமல் தவிர்க்கலாம். உள்ளிருக்கும் உடல் பாகங்களும் சரியாக இயங்கும். 
 
இரவில் செய்ய வேண்டியது:
 
குளிர் காலத்தில் சருமம் வரட்சியாகாமல் இருப்பதற்கு நாம் பகலில் மட்டுமல்ல இரவிலும் சில விஷயங்களை செய்ய வேண்டும்.  கெட்டியான க்ரீம்களை இரவில் முகத்தில் தடவ வேண்டும். அந்த கிரீம்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். 
 
டெட் ஸ்கின் செல்ஸ்: 
 
உங்கள் சருமத்தை வாரத்திற்கு ஒரு முறை Exfoliate செய்ய வேண்டும். முகத்தில் இருக்கும் இறந்து போன செல்களை நீக்குவதால் உங்கள் சருமம் வரண்டு போகாமல் தடுக்கலாம். சுடுதண்ணீர் வைத்து  ஸ்ட்ரீம் செய்து கெட்ட ஸ்கின் செல்களை எடுக்கலாம். 
 
தேங்காய் எண்ணெய்:
 
குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க இய் அற்கை எண்ணெய்களை உபயோகிக்கலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் திரவதங்கம் அர்கன் எண்ணெய் உள்ளிட்டவற்றை உபயோகிக்கலாம். 
 
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News