போட்டோக்களில் ஒல்லியா தெரியணுமா? ‘இப்படி’ போஸ் கொடுங்க..

உடல் பருமனுடன் இருக்கும் பலருக்கும், தான் எடுக்கும் புகைப்படங்களில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்கள் என்னென்ன பாேஸ் ட்ரை பண்ணலாம்?   

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2024, 06:14 PM IST
  • போட்டோவில் ஒல்லியாக தெரிய டிப்ஸ்
  • சில புதுவித போஸ்
  • இதை ட்ரை பண்ணி பாருங்க!
போட்டோக்களில் ஒல்லியா தெரியணுமா? ‘இப்படி’ போஸ் கொடுங்க.. title=

நம்மில் பலர், உடல் பருமனுடன் காட்சியளிப்போம். எடையை குறைக்க, உடல் தோற்றத்தை மாற்ற என்னென்னவோ முயற்சி செய்தும் அது சில சமயங்களில் வீணாகி போய்விடும். இதனால் பல சமயங்களில் நம்மை நாமே பாேட்டோ எடுத்துக்கொள்வதை கூட தவிர்ப்போம்.  போட்டோக்களில் நிற்கும் போது சில போஸ்களை ட்ரை செய்தால், நாமும் ஒல்லியாக தெரியலாம். அவை என்னென்ன தெரியுமா? 

தோற்றம்:

நாம் நிற்கும் தோற்றமும் நம்மை அழகாக காண்பிக்கும். நன்கு போட்டோ எடுப்பவர்களுக்கு இந்த உத்தி தெரியும். இதனால்தான் ஒரு சிலர் எந்த எடிட்டிங்கும் செய்யாமல் எடுக்கும் நேச்சுரல் போட்டோக்கள் கூட அழகாக இருக்கும். நீங்கள் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது கேமராவை நேராக நோக்கி நிற்பதை விட, 45 டிகிரி கோணத்தில் நின்று, காலை முன்னாள் நிறுத்தி போஸ் கொடுக்கலாம். 

கைகளை உடலுக்கு இடையே வைத்தல்:

கொஞ்சம் பப்ளியாக இருப்பவர்கள், இரு கைகளையும் உடலுடன் ஒட்டி வைத்திருக்காமல் கொஞ்சம் இடையே வைத்து போஸ் கொடுக்கலாம். உதாரணத்திற்கு இரு கைகளையும் உங்களது உடலின் இரு பக்கங்களில் வைத்துக்கொள்வதற்கு பதிலாக இடது அல்லது வலது கையை இடுப்பில் வைத்து கொஞ்சம் சாய்வாக திரும்பி போஸ் கொடுக்கலாம். இப்படி போட்டோ எடுத்தாலும் நீங்கள் குண்டாக தெரிய மாட்டீர்கள். 

Photoshoot Ideas

தடிமனான தாடை:

முகத்திற்கு ஜூம் செய்து போட்டோ எடுக்கும் போது உங்கள் தாடை தடிமனாக தெரிவது சகஜம். எனவே, உங்களுக்கு அது போன்ற தடிமனான தாடை இருந்தால் தலையை லேசாக சாய்ப்பது மூலமாகவும் கேமராவை பார்க்காமல் சைடில் திரும்பி கேண்டிட் போஸ் கொடுப்பது மூலமாகவும் இது தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி, உங்களது நாக்கை மேல் தாடையில் ஒட்டி இழுத்துக்கொள்வதன் மூலமாக கீழ் இருக்கும் சதை தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

தோரணை:

போட்டோ எடுக்கும் போது நிமிர்ந்து, தைரியத்துடன் நேரே பார்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தடிமனான உடல் கொண்டவராக இருந்தாலும் அது பிறருக்கு தெரியாது. உங்கள் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதி குணிந்தவாறு இருந்தால் போட்டோவில் நீங்கள் confidence இல்லாதவர் போல தெரிவீர்கள். எனவே, அப்படி போஸ் கொடுப்பதை தவிர்க்கவும். 

ஆடை:

நாம் உடுத்தும் ஆடைகளும் கூட, உங்களை தடிமனாக காண்பிக்கலாம். எனவே, அதையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். உடலுடன் மிகவும் ஒட்டிய ஆடைகள் உங்களின் தசையை வெளியில் காட்டலாம். அதே போல, மிகவும் தொளதொளவென இருக்கும் ஆடைகள் நீங்கள் ஏற்கனவே இருப்பதை விட உங்களை உடல் பருமன் ஆனவராக காட்டலாம். எனவே, உங்களுக்கு ஃபிட்டாக இருக்கும் ஆடையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லதாகும். அதே போல, டார்க் ஆன கலர்களை நீங்கள் போட்டோ எடுக்கும் போது அணிந்து கொள்ளலாம். இவை உங்கள் உடல் தோற்றத்தை சிறிது சின்னதாகவே காண்பிக்கும். 

மேலும் படிக்க | புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News