பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பது இன்னும் முடிவாகவில்லை
பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளார் ஜெய்ஷா
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் பங்கேற்பது குறித்து இந்தியா இன்னும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
இந்தியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு அணிகள் பாகிஸ்தானில் விளையாட ஒப்புதல் தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியா மவுனம் காக்கிறது
இந்தியா எந்த முடிவும் தெரிவிக்காததால் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது தாமதமாகிறது. பிசிபி இதுகுறித்து ஐசிசியிடமும் தெரிவித்துவிட்டது.
முன்கூட்டியே இந்தியா முடிவை அறிவித்தால் மட்டுமே தாங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பாகிஸ்தானை தவிர வேறு எங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது. இப்போது இந்தியாவுக்கு இரண்டே ஆப்சன் மட்டுமே இருக்கிறது. ஒன்று பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும், மற்றொன்று தொடரை முற்றிலும் புறக்கணிப்பது.
இந்திய கிரிக்கெட் அணி ஒருவேளை இந்த தொடரை புறக்கணித்தால் இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும். எனினும் இப்போது ஐசிசி தலைவராகியிருக்கும் ஜெய்ஷா இது குறித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளார்.
உள்துறை அமைச்சராக இருக்கும் அவருடைய தந்தை அமித் ஷாவை அதிகாரப்பூர்வமாக சந்தித்து இந்திய அணி பாகிஸ்தான் செல்ல அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார். மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியும் என்பதால் இந்த ஆலோசனை நடக்க இருக்கிறது. இதன் முடிவில் இந்தியா பாகிஸ்தான் செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.