சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே

Venus Nakshatra Transit : வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் நடுப்பகுதியில், சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது அனைத்து ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 7, 2024, 08:39 PM IST
  • பூர்வீக வியாபாரம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
  • மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெறுவீர்கள்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே title=

Venus Nakshatra Transit 2024 : ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். அதேபோல் சுக்கிரன் கிரகமானது சுக போகங்களின் அதிபதி ஆவார். 

ஜோதிடத்தின் படி சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர் என்று கூறுவார்கள். எனவே, இந்த சுக்கிரன் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம், அதன் பலன் அனைத்து ராசிகளுக்கும் தரும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறிய சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்தார், தற்போது வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். 

மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ பெருகும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும், புதிய வழியில் வருமானம் கிடைக்கும். மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெறுவீர்கள்.

கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி உண்டாகும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். பூர்வீக வியாபாரம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் சிறப்பாக அமையும். பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவையும் பெறலாம், நிதி நிலை மேம்படுத்தும். குடும்பத்துடன் மத பயணமும் செல்லலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Vinayagar chaturthi 2024: பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News