வீட்டில் எத்தனை மது பாட்டில்களை வைத்திருக்கலாம்? ஜாஸ்தியா வச்சுருந்தா அவ்வளவுதான்...

Permit For Alcohol: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் வீட்டில் மதுபானங்களை வைத்திருக்க குறிப்பிட்ட அளவு மட்டும் அனுமதி இருக்கிறது. அந்த வகையில், எந்த மாநிலங்களில் எந்தளவிற்கு வீட்டில் மதுபானங்களை வைத்திருக்கலாம் என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 2, 2024, 11:08 AM IST
  • இந்த விதி பலருக்கும் தெரிந்திருக்காது.
  • அனுமதியை மீறி அதிக மதுபாட்டில்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
  • சட்ட ரீதியாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டில் எத்தனை மது பாட்டில்களை வைத்திருக்கலாம்? ஜாஸ்தியா வச்சுருந்தா அவ்வளவுதான்... title=

Permit For Alcohol In Indian States: மது குடிப்பது உடல் நலத்திற்கு கேடு, நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. இந்த வரிகளை நாம் சொல்லிக்கொண்டு வருவது அவசியமாகிறது. அதே நேரத்தில், மது குடிப்படி அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாகும். யாரையும் மது குடிக்காதீர்கள், மது குடியுங்கள் என நீங்கள் கட்டாயப்படுத்தவும் முடியாது, கூடாது... 

இது ஒருபுறம் இருக்க, மதுவை பலரும் பாரில் அருந்துவார்கள், வீட்டில் அருந்துவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கிறது. மேலும், மது பிரியர்கள் பலரும் வீட்டில் மதுவை ஸ்டாக் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், அதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒருவர் தனது வீட்டில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மதுபானங்களை வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது பலருக்கும் தெரியாது. 

மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள அளவை மீறி நீங்கள் வீட்டில் மதுவை வைத்திருந்தால், அதற்கு கடும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வீட்டையும் வந்து ஆய்வு செய்ய மாட்டார்கள் என்றாலும், ஒருவேளை எதாவது பிரச்னையில் உங்கள் வீட்டில் அதிக மதுபாட்டில்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த விதிகள் மாறுபடும் என்பதால் அவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | மது குடித்தால் இந்த உணவுகளை தவிர்த்துவிடுங்கள்... அப்புறம் பிரச்னை ஆகிரும்!

கேரளா: நமது அண்டை மாநிலமான கேரளாவில் 3 லிட்டர் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை வைத்திருக்கலாம், மேலும் 6 லிட்டர் பீரை நீங்கள் வைத்திருக்க அனுமதி இருக்கிறது. 

ஆந்திர பிரதேசம்: ஆந்திராவில் உங்களால் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் அல்லது வெளிநாட்டு மதுபானங்கள் ஆகியவற்றில் 3 பாட்டில்கள் வைத்திருக்கலாம். 6 பாட்டில் பீர் வைத்திருக்கலாம். 

மகாராஷ்டிரா: மதுபானம் அருந்தவே அங்கு நீங்கள் உரிமம் பெற வேண்டும். மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களை வாங்குவதற்கும், கொண்டு செல்வதற்கும், குடிப்பதற்கும் தனித்தனி உரிமம் வாங்க வேண்டும். 

கோவா: நீங்கள் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் 12 பாட்டில்களும், 24 பீர் பாட்டில்களும், 18 நாட்டு மதுபான பாட்டில்களும் வைத்திருக்கலாம். 

இமாச்சல் பிரதேசம்: இங்கு 48 பீர் பாட்டில்கள், 36 விஸ்கி பாட்டில்களை நீங்கள் வீட்டில் வைத்திருக்கலாம்.

டெல்லி: பீர், ஒயின் என ஒட்டுமொத்தமாக 18 லிட்டர் மதுபானங்களை வைத்திருக்கலாம். மேலும், டெல்லியில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், ஒரு லிட்டர் மட்டும் அனுமதிக்கப்படும். 

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப்: இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை 1.5 லிட்டர் வரை மட்டும் வைத்திருக்க அனுமதி உள்ளது. மேலும், 6 லிட்டர் பீர், 2 லிட்டர் ஒயின் வைத்துக்கொள்ளலாம்.   

மேற்கு வங்கம்: 21 வயதை எய்தியவர்கள் மட்டுமே மது அருந்த முடியும். இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை 6 பாட்டில்கள் வைத்திருக்கலாம், 18 பீர் பாட்டில்களையும் வைத்திருக்கலாம். 

தமிழ்நாடு: இங்கு நீங்கள் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் சேர்த்து 12 பாட்டில்களை நீங்கள் வீட்டில் வைத்திருக்கலாம். மேலும் 12 பீர் பாட்டில்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

இதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறை பின்பற்றப்படுகின்றன. மிசோரம், குஜராத், பீகார், நாகாலந்து மற்றும் லட்சத்தீவில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் மது அருந்துவதற்கும், மது கொண்டுச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | மது குடித்தும் ஆரோக்கியமா இருக்கணுமா... அப்போ சைட் டிஷ்ஷாக இவற்றை சாப்பிடணும்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News