Relationship Tips: மகிழ்ச்சி, சிரிப்பு, துக்கம் போல் கோபமும் ஒரு உணர்வுதான். பல சமயங்களில் நாம் ஒரு தனி நபர் மீது கோபம் கொள்கிறோம். சில நேரங்களில் அதிகப்படியான கோபம் காதல் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். ஆணோ அல்லது பெண்ணோ அனைவரும் கோபப்படுபவர்கள்தான்.
ஆனால் பெண்கள் ஆண்களை விட உணர்ச்சிவசப்படுவார்கள் என பொதுக்கருத்து உண்டு. பல நேரங்களில் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தங்கள் இணையருடன் கோபப்படுவார்கள். இதில், மாற்றுக் கருத்து இருக்கலாம். இந்நிலையில், பெண்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
1. ஆழ்ந்த மூச்சு விடுங்கள்
உங்கள் துணையின் செயலோ அல்லது பேச்சோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களை வசைபாடுகிறீர்கள். கோபப்படுவதை நிறுத்த ஆழ்ந்த மூச்சு விடுங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மனம் அமைதியாகி கோபம் தானே தணியும்.
2. மனதை அமைதிப்படுத்துங்கள்
கோபம் கொள்வது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மோசமாக்கும். எனவே முதலில் உங்களை கோபப்படுத்தும் விஷயத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். உங்கள் கண்களை மூடிக்கொண்டு முடிந்தவரை உங்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | உடலுறவின்போது ஆண்கள் இதையெல்லாம் கவனிப்பாங்க.. பெண்களே இத நோட் பண்ணுங்க!
3. மனதுவிட்டு பேசுங்கள்
உங்கள் கூட்டாளியின் பழக்கவழக்கங்கள் அல்லது செயல்கள் எதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதில் எனக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுங்கள். உண்மையில் எந்த ஒரு நபரும் அந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நாள் மட்டும் கோபித்துக்கொள்வார்கள். பிறகு தானே அதில் இருந்து வெளியேறிவிடுவார்.
4. இசையைக் கேளுங்கள்
உங்கள் மனநிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் இசை ஒருவருக்கு சிறந்த சிகிச்சையாக செயல்படும். உங்கள் துணையிடம் நீங்கள் கோபமாக இருந்தால், உடனடியாக மென்மையான இசையைக் கேட்கத் தொடங்குங்கள். இது உங்கள் சூழ்நிலையை மகிழ்ச்சியாக ஆக்குகிறது.
இவை அனைத்தும், எளிதான பிரச்னைகளையும், சூழ்நிலைகளையும் கையாளவே கூறப்பட்டுள்ளது. பிரச்னையின் அல்லது சூழலுக்கு ஏற்ப செயல்படுவதுதான் காதல் உறவில் சரியானதாக இருக்கும். உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல், அவற்றுக்கான தீர்வை நிதானமாக சிந்திப்பது மூலம் தேவையற்ற கோபம், அழுத்தம், பதற்றம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம். https://zeenews.india.com/tamil/lifestyle/dating-methods-and-idea-differ...
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | கணவர்கள் ஜாக்கிரதை! திருமண உறவில் இந்த தவறுகளை செய்தால் விவாகரத்து தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ