வாயு காரணமாக ஏற்படும் தலைவலியை போக்குவது எப்படி? இதோ சில வீட்டு வைத்திங்கள்!

Home Remedies For Gastric Headaches: வாயு காரணமாக பலருக்கு தலைவலி உண்டாகலாம். இதை நிவர்த்தி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 31, 2023, 12:22 PM IST
  • வாயுத்தொல்லையால் தலைவலி ஏற்படுவது சகஜம்.
  • இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
  • என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வாயு காரணமாக ஏற்படும் தலைவலியை போக்குவது எப்படி? இதோ சில வீட்டு வைத்திங்கள்! title=

நம்மில் பலருக்கு தலைவலி வருவதற்கு காரணம், வாயுத்தொல்லையாக இருக்கலாம் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் விளக்குகின்றன. நமது நாசி, வயிறு, வாய், சிறு குடல், பெரு குடல் ஆகியவற்றை மூளையுடன் இணைக்கும் பகுதி ஒன்று நம் உடலில் உள்ளதாக சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஆங்கிலத்தில், Gut Health என்பார்கள். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாயுத்தொல்லை காரணமாக தலைவலி ஏற்படக்கூடுமாம். இந்த தலைவலியின் முக்கிய தூண்டுதல் என்னவென்றால், நம் உடலில் சில இரசாயனங்கள் வீக்கமடைந்த குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் பயணித்து தலைவலியை ஏற்படுத்தும் மூளையை பாதிப்பதாகும். இந்த தலைவலியினால் சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படலாம். மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவைத் தவிர்ப்பதால் இந்த தலைவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது அஜீரணம் மற்றும் வீக்கத்தை ஏற்படுகிறது. இரைப்பை தலைவலிக்கு மலச்சிக்கல் ஒரு பொதுவான காரணம் என்றும் கூறப்படுகிறது. வயிற்றுப்போக்கு இரைப்பை தலைவலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, பின்னர் நமது மனநிலையை பாதிக்கிறது. இதை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து குடிப்பது..

வாயுத்தொல்லையினால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்தும் எளிய தீர்வு எலுமிச்சை தண்ணீர். அதிகாலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் உடலின் pH அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.

புதினா தேனீர்:

புதினா தேநீர் பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது. 1 கப் பெப்பர்மின்ட் டீ பருகுவது மன அழுத்தத்தை குறைத்து தசைகளை தளர்த்த உதவும். தசைகளை சாந்தப்படுத்தும் மெத்தனல் இதில் உள்ளது.  இது தலைவலியில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை சரிசெய்யவும் உதவுகிறது. 

துளசி இலைகள்:

துளசி இலைகளில் வயிற்றுப் புண்ணை ஆற்ற உதவும். வயிற்று உப்புசம் மற்றும் வாயுவைக் குறைக்கும் வலி நிவாரணி பண்புகள் இதில் உள்ளன. 6-7 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துளசி இலைகளை மென்று சாப்பிடுவது செரிமான கோளாறுகளை குறைக்கும். வயிறுவீக்கத்தைக் குறைத்து, செரிமானம் சம்பந்தப்பட் பிரச்சனைகளை குணப்படுத்தும் பண்புகளைக் துளசி கொண்டுள்ளது. மேலும் லேசான இரைப்பை தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மேலும் படிக்க | கூந்தல் உதிர்வுக்கு முடிவுகட்டும் வெந்தயம் மற்றும் செம்பருத்தி.. இப்படி பயன்படுத்தி பாருங்க

மெக்னீசியம் உள்ள உணவுகள்:

இரைப்பை தலைவலியை குணப்படுத்த மெக்னீசியம் ஒரு சிறந்த மருந்து. இது உணவின் தலைவலியை சமாளிக்கும் பல நற்பண்புகளை கொண்டுள்ளது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தலைவலியிலிருந்து விடுபட உதவுகிறது.

மோர்:

மோரில் புரோபயாடிக்குகள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இது அஜீரணம், வயிறு வீக்கம் மற்றும் வாயுவை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகள் அல்லது மலச்சிக்கல் உள்ளவர்கள், மோர் குடிப்பதால் வயிற்றில் உள்ள அசௌகரியம் குறைந்து, இரைப்பை தலைவலியை குணப்படுத்தும்.

கொத்தமல்லி சாறு:

கொத்தமல்லி சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நோய்கள் வராமல் தடுத்து குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. கொத்தமல்லி சாறு இரைப்பைத் தலைவலியைக் குணப்படுத்த நல்ல தீர்வாக அமைகிறது. அரை டம்ளர் மோர் மற்றும் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி சாறு இரைப்பைத் தலைவலி, அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது. இதில் சினியோல் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News