இதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ( இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ) மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 15, 2018, 11:07 AM IST
இதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்! title=

ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ( இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ) மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

 

 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த பியார் ப்ரேமா காதல் படம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அந்த படத்தின் மூலம் நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். 

தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

Trending News