இன்றைய சூழலில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை முடிகொட்டுவதுதான். சரியான உணவு பழக்கம் இல்லாதது, சுற்றுசூழல் மாசுபாடு ஆகியவை முடி உதிர்வை அதிகப்படுத்துகின்றன. மேலும் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் சிறு வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக தலையில் வறட்சி, முடி உடைதல், நரை முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க முடியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு உள்ளே இருந்து ஊட்டமளிக்க தினசரி எண்ணெய் பயன்படுத்த வேண்டியது அவசியம். இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்கள் பொடுகு, வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தடுத்து, முடிக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் தலைமுடிக்கு சிறந்த எண்ணெய்யை எப்படி தேர்வு செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அதிகரித்து அச்சுறுத்தும் டெங்கு: அலர்டா இருக்க அறிவுறுத்தும் மருத்துவர்கள்
ஜோஜோபா எண்ணெய்
ஜோஜோபா என்பது வடக்கு மெக்ஸிகோ, தென்மேற்கு அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் கிடைக்கும் ஒருவித கொட்டை ஆகும். அதன் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் சில மருந்துகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜோஜோபா எண்ணெய் முடிக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. தினசரி இந்த எண்ணையை முடிக்கு தேய்த்து வந்தால் முடியை உள்ளே இருந்து பலப்படுத்துகிறது மற்றும் முடிக்கு ஆழமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதன் மூலம் முடி சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த எண்ணையை முடிக்கு தடவி, நன்கு மசாஜ் செய்யவும். இதன் மூலம் அனைத்து இடங்களிலும் எண்ணெய் பரவி முடி வேகமாக வளரும். இந்த ஜோஜோபா எண்ணெயில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஆலிவ் எண்ணெய்
பொதுவாக ஆலிவ் எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணையில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது. இந்த பண்புகள் முடிக்கு பலத்தை கொடுக்கிறது. இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. முடியின் வேர்களில் நன்கு ஊடுருவி மயிர்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ஆலிவ் எண்ணெயை முடிக்கு நன்கு தடவி, குளிக்கும் போது ஷாம்பு போட்டு கழுவதும். இது முடியில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நிறைய தாதுக்கள் உள்ளன. தலையில் பொடுகு தொல்லை உள்ளவர்கள் இந்த ஆமணக்கு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரியாகும். மேலும் உச்சந்தலையில் ஏற்படும் புண்கள் மற்றும் முடி உதிர்வு போன்றவற்றையும் சரி செய்கிறது. மேலும் ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கிறது. வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை தலைமுடிக்கு ஆமணக்கு எண்ணெய் தடவி 4 மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷாம்பு போட்டு முடியை கழுவினால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் முடிக்கு, சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பலரும் பயன்படுத்தும் பொதுவான முடி பராமரிப்பு எண்ணெய் இதுவாகும். இயற்கையாக கிடைக்கும் இந்த தேங்காய் எண்ணெய் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயில் நிறைய வைட்டமின்கள் உள்ளன, இவை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்வதை தடுத்து, முடிக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடிக்கு பொலிவை தருகின்றன.
மேலும் படிக்க | வாழ்வை முடக்கிப்போடும் முதுகுத்தண்டு பிரச்சனை: அறிகுறிகள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ