கூந்தலுக்கு வேப்ப இலை கலந்த எண்ணெய் உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: மாறிவரும் வானிலையில் குறிப்பாக மழை காலத்தில் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையில், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் கொழுப்பு அமிலம், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் உள்ளன. இது தலைமுடி தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளில் (Hair Care Tips) இருந்து நிவாரணம் அளிக்கிறது. தலை அரிப்பு தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் கூட, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், முடிக்கு வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது, அதனை எவ்வாறு தயாரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வோம்.
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய்யை கூந்தலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
பொடுகை பிரச்சனை தீரும்
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே உச்சந் தலையில் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுக்கவும். அதனால் ஏற்படும் பொடுகு பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | உதிர்ந்த முடியை மீண்டும் பெற இந்த 4 இயற்கை எண்ணெய்கள் பெரிதும் உதவும்!
முடி உதிர்வதைத் தடுக்க உதவும்
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் முடி உதிர்வு பிரச்சனையை போக்குகிறது. தலையில் கூந்தல் உள்ள துளைகளை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து வலுவூட்டுகிறது.
நல்ல முடி வளர்ச்சிக்கு உதவும்
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் தலைமுடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெயைத் தொடர்ந்து தடவினால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும்.
உச்சந்தலையில் அரிப்பு நீங்க உதவும்
மழைக்காலத்தில், உச்சந்தலையில் அரிப்பு பிரச்சனையை பெரும்பாலானோர் எதிர்கொள்வார்கள். இதை தவிர்க்க வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயை பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் செதில்கள் குவிவதால் ஏற்படும் அரிப்புகளை அகற்ற உதவுகிறது. வேப்ப எண்ணெயை சூடாக்கி, அதனுடன் கற்பூரத்தை சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இதனால் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் தொற்று பிரச்சனை நீங்கும்.
இளநரை ஏற்படுவதை தடுக்க உதவும்
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது முடி நரைப்பதைத் தடுக்கிறது.
தலையில் தடவ வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் தயாரிக்கும் முறை
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் தயாரிக்க, முதலில் வேப்ப இலைகளை நன்கு கழுவி, அரைக்கவும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி வைத்துத் கொண்டு தினமும் பயன்படுத்தவும்.
வேப்ப இலை போட்டு காய்ச்சிய எண்ணெய்யை கூந்தலில் தடவும் முறை
வேப்ப எண்ணெயை லேசாக சூடாக்கி, விரல்களின் உதவியுடன் உச்சந்தலையில் மெதுவாக தடவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு, வேப்ப எண்ணெயை தலையில் ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ