வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31ம் தேதி என்ற நிலையில், பெரும்பாலான சிக்கல்கள் சரி செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், வருமான வரி போர்ட்டலில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் பயனர்கள் இன்னும் பல விதமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, நெருங்கி வரும் நிலையில், இன்னும் வரி செலுத்துவோர் பலர், தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவில்லை. முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே அரசாங்கம் காலக்கெடுவை நீட்டிக்கும் என்று நம்புகிறார்கள். கடந்த இரண்டு நிதியாண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ கணக்கில் பகிரப்பட்ட ட்வீட்டில், 2022-23 நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி ஜூலை 31, 2022. இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றால், தயவுசெய்து http://incometax.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இன்றே தாக்கல் செய்யவும் என பதிவிட்டுள்ளது. IT விதிகளின்படி, தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிப்பட்ட வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டின் ITR களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த நிதியாண்டின் ஜூலை 31 ஆகும்.
இந்த முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க அரசு திட்டமிடவில்லை. ஏனெனில் பெரும்பாலான வருமான வரி கணக்கு தாக்கல், ஜூலை 31 ஆம் தேதிக்குள் நடந்து விடும் என்று எதிர்பார்க்கிறது என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். "இதுவரை, தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து எந்த யோசனையும் இல்லை," என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ
அதேசமயம், காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று மக்கள் நினைப்பதற்கு மற்றொரு காரணம், வரி போர்ட்டலில் பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகும். பெரும்பாலான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், பயனர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் இன்னும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வரி தாக்கல் செய்யும் போர்டல் https://eportal.incometax.gov.in சரியாக வேலை செய்யவில்லை", "திறக்கவில்லை", "OTP சிக்கல்", "அதிக நேரம் எடுத்துக்கொண்டது, தொடர்ந்து அப்லோட் செய்த பின்னர் தோல்வியடைகிறது" என்று பயனர்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | TDS New Rule: ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும், முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ