கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அது பல சமயம் உதவியாய் இருந்தாலும், சிலபல சமயங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த போராட்டத்தின் உச்சகட்டத்தை அனுபவித்துவிட்டார் ஒரு மணமகன்.
இந்தோனேசியாவில் (Indonesia) தனது திருமணத்திற்கு சென்ற ஒரு மணமகனுக்கு கூகுள் மேப்ஸ் தவறான வழியை காட்டி, அவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பவிருந்தது. கரணம் தப்பினால் மரணம் இல்லை இல்லை.... திருமணம் என்ற நிலையில் தவறான திருமண மண்டபத்திற்கு வந்து வேறு ஒரு பெண்ணை மணக்கவிருந்த விபத்தில் இருந்து தப்பித்தார் மணமகன்.
விஷயத்தை கேட்டாலே ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதா? பாவம், அந்த அப்பாவி மணமகனின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்!
திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு மணமகனின் குடும்பத்தினருக்கு வழி தெரியாது. அவர்கள் கூகுள் மேப்ஸை முழுமையாக நம்பியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு சென்றபோது, மாப்பிள்ளை வீட்டாரை அன்புடன் வரவேற்ற பெண் வீட்டார், விழுந்து விழுந்து உபசாரமும் செய்தனர்.
Also Read | கொரோனாவின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் இவற்றைப் பற்றித் தெரியுமா?
பிறகு மணமகனின் குடும்பத்தினருடன் பெண் வீட்டை சேர்ந்த சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் பேசுவதற்கும், மாப்பிள்ளை வீட்டைப் பற்றி தங்களுக்கு தெரிந்த தகவல்களுக்கும், மாறியிருப்பதை பெண் வீட்டார் தெரிந்துக் கொண்டனர்.
உடனே பிற உறவினரிடம் சந்தேகத்தை தெரிவிக்க, தீர விசாரித்ததில் மாப்பிள்ளை இடம் மாறியது தெரிந்தது. மிகவும் சங்கடமான சூழ்நிலையை, மேலும் சங்கடமாக்காமல், இதம் பதமாக மாப்பிள்ளை இடம் மாறி வந்த விஷயத்தை தெரிவித்து, மாப்பிள்ளை வீட்டாரை திருப்பி அனுப்பினார்கள். இதில் மற்றுமொரு சுவாரசியம் என்னவென்றால், திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணுக்கு இங்கு நடந்த இட மாற்றம், ஆள் மாறி, தான் திருமணம் செய்துக் கொள்ள ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலை எதுவும் தெரியவில்லை.
இந்தோனெஷியாவின் மத்திய ஜாவாவின் பாக்கிஸ் மாவட்டத்தில் லோசரி ஹேம்லெட். என்ற இடத்திற்கு பதிலாக ஜெங்க்கோல் ஹேம்லெட் என்ற இடத்தை அடைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், மாப்பிள்ளை இடம் மாறிவிட்டார்.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சி வருவதற்குள் கதையில் திருப்பம் வந்து மாப்பிள்ளை திருப்பி அனுப்பப்பட்டு, சரியான மண்டபத்திற்கு சென்று தனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்துக் கொண்டார்.
ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR