2022ஆம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் என்பதால் பலரும் இன்றைய பொழுதை கழிக்க பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 31 ஆண்டின் கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி, பல இடங்களில் புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. எனவே, புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகிவிட்டது.
ஜனவரி முதல் நாள் ஜிம்மிற்கு செல்வது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரும் ஒரு சந்தர்ப்பமாகும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டிலும் அதே நிலைமைதான். இது இன்னும் அச்சுறுத்தலாக இருந்தாலும், உலகெங்கிலும் கொரோனாவை அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உரிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனமும் வழக்கம் போல் டூடுலை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்துள்ளது. ஆம், வழக்கம்போல் கூகுள் டூடுலை கிளிக் செய்தால், கூகுள் அதுகுறித்த தகவல் உள்ள பக்கத்திற்கு அழைத்துசெல்லும் அல்லவா.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை நினைத்து பயமா? பாதுகாப்பாக பயன்படுத்த எளிய வழிகள்
அதேபோல்தான், இன்றும் நீங்கள் கூகுள் டூடுல் லோகோவை கிளிக் செய்தால், அந்த பக்கம் லோட் ஆன பின், புத்தாண்டு வரவேற்கும் விதமாக கலர்பேப்பர்கள் உங்களின் கணினி திரை (அ) மொபைல் திரைகளில் முழுவதும் வெடித்துச்சிதறும். ஒருவேளை அந்த கலர்பேப்பர்கள் உங்களுக்கு போதவில்லை என்றால், கணினியின் தேடுபொறிக்கு இடதுபக்கமும், மொபைல் தேடுபொறிக்கு வலதுபக்கமும் இருக்கும் கலர் பேப்பர் கோனை அழுத்தினால், உங்களுக்கு போதும் போதும் என்றளவு கலர் பேப்பர்கள் வந்துகொண்டே இருக்கும்.
இதில் என்ன சர்ப்ரைஸ் என்று கேட்பது புரிகிறது. ஆனால், இதை உங்கள் சிறு வயது குழந்தைகளிடம் கொண்டுசென்று காட்டினால் இன்று முழுவதும் நீங்கள்தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாகிவிடுவீர்கள். இளைஞர்கள் தனது தாய், தந்தையிடம் இதனை காண்பித்து அறிவுஜீவி (!) என்ற பட்டத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அதே தருணத்தை மனதில் புதைத்து வைத்து, வரும் புத்தாண்டை சிறுகுழந்தையை போன்று உங்களின் அன்பானவர்களுடன் பாதுகாப்பாக கொண்டாடுங்கள். அதுதான் இந்த கூகுள் டூடுலின் நோக்கமும் கூட.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ