ஊருக்கு போகணுமா? 2 நிமிடங்களில் கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்: இதோ செயல்முறை

Tatkal Train Ticket:  வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 25, 2023, 12:54 PM IST
  • கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!!
  • இந்த நேரத்தில் இருந்து தத்கால் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
  • மாஸ்டர் லிஸ்டை எவ்வாறு உருவாக்குவது?
ஊருக்கு போகணுமா? 2 நிமிடங்களில் கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்: இதோ செயல்முறை title=

தத்கால் ரயில் டிக்கெட்: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இன்றும் இது நாட்டில் மிகவும் விரும்பப்படும் போக்குவரத்து முறையாக உள்ளது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு ரயில் பயணத்தை விரும்புவதற்கு இதுவே காரணம். பண்டிகை நாட்களில், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் (Confirm Ticket) கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பண்டிகை காலங்களில் பெரும்பாலும் கன்ஃபர்ம் டிக்கெட்டை பெற மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அந்த சிரமத்தை குறைக்க சில டிப்ஸ் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நாம் முன்பே திட்டமிடாமல், அவசரமாக முடிவு செய்து, அதற்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபர்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. நமக்கு பல சமயம் வெய்டிங் லிஸ்ட் டிக்கெட், அதாவது காத்திருப்பு பட்டியல் டிக்கெட் தான் கிடைக்கிறது. முன்னரே திட்டமிட்டு டிக்கெட் புக்கிங் துவங்கும் நாளிலேயே நாம் புக் செய்ய நினைத்தாலும், பல சமயம் இப்படிப்பட்ட பண்டிகை காலங்களில், புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகி விடுகின்றன.

கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!!

ரயில் பயணிகள் கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஆம், இப்போது உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெற பயனிகளிடம் தத்கால் ஆப்ஷன் உள்ளது. ஆனால் தத்காலில் டிக்கெட்டுகளை புக் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், இதற்கு தீர்வு உள்ளது. இதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மற்ற பயணிகளை விட வேகமாக தத்காலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யக்கூடிய ஒரு தந்திரத்தை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம், தத்கால் ரயில் டிக்கெட்டை (Tatkal Train Ticket) எளிதாகப் பெறலாம். 

இந்த நேரத்தில் இருந்து தத்கால் டிக்கெட் புக் செய்ய வேண்டும்

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கு முன், ஐஆர்சிடிசி இணையதளத்தில் தத்கால் டிக்கெட்டுகளை எப்போது முன்பதிவு செய்யலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏசி டிக்கெட் எடுக்க வேண்டுமானால் காலை 10 மணி முதல் தத்கால் முன்பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஸ்லீப்பர் கோச்சுக்கான இந்த டிக்கெட் முன்பதிவு காலை 11 மணி முதல் செய்யப்படுகிறது. இதற்கு முதலில் IRCTC இணையதளத்திற்குச் சென்று ஒரு மாஸ்டர்ல் லிஸ்டை தயாரிக்க வேண்டும். இதை முன்னரே தயாராக வைத்துக்கொண்டால், உடனடி முன்பதிவுக்கு அதிக நேரம் எடுக்காது. மாஸ்டர் லிஸ்டில் பயணம் செய்பவரின் பெயர், முகவரி, வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு வரப்பிரசாதம்... ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு!

மாஸ்டர் லிஸ்டை எவ்வாறு உருவாக்குவது?

- IRCTC இணையதளத்தில் 'My Account' -இல் 'Myprofile' -ஐத் தேர்ந்தெடுக்கவும்.

- இதற்குப் பிறகு Add/Modify Master List  விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- பயணிகளின் பெயர், வயது போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

- டிக்கெட் முன்பதிவு செய்யும் போது My Saved Passengers List -ஐ சேர்ப்பதன் மூலம், உங்கள் முன்பதிவு எந்த தொந்தரவும் இல்லாமல் செய்யப்படும். இது உங்கள் முன்பதிவு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, உடனடியாக டிக்கெட்டுகளைப் பெறுவதையும் எளிதாக்குகிறது.

இது தவிர, நீங்கள் கட்டண விருப்பத்திற்குச் சென்று UPI பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் அதிக நேரம் எடுக்காமல் நீங்கள் உடனடியாக பணம் செலுத்தலாம். தத்கால் முன்பதிவு செய்ய, குறைந்தபட்சம் 5 நிமிடங்களுக்கு முன்னதாக ஐஆர்சிடிசி செயலி (IRCTC App) அல்லது இணையதளத்தைத் திறந்து கணக்கில் லாக் இன் செய்யவும். மாஸ்டர் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்ளவும். 

மேலும் படிக்க | டிரெயின் டிக்கெட் கட்டணத்தில் 75% தள்ளுபடி கிடைக்கும்! யாருக்கு எத்தனை டிஸ்கவுண்ட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News