SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS! வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியது எஸ்பிஐ

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எஸ்பிஐ தனது வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2022, 11:31 AM IST
  • பாரத ஸ்டேட் வங்கி வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது.
  • வாட்ஸ்அப்பில் கிடைக்கும் குறிப்பிட வங்கிச் சேவைகள் பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS! வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியது எஸ்பிஐ title=

பாரத ஸ்டேட் வங்கி (SBI ) வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான SBI அதிகாரப்பூர்வ ட்வீட் மூலம் இந்த சேவையை தொடங்குவதாக அறிவித்தது. வாட்ஸ்அப்பில் கிடைக்கும்  குறிப்பிட வங்கிச் சேவைகள் பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். முக்கியமாக அவர்கள் புதிய பயன்பாட்டைப் பதிவிறக்கவோ அல்லது ஏடிஎம்மிற்குச் சென்று தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ தேவையில்லை. இந்த சேவைகள் வாட்ஸ்அப் மூலம் கிடைக்கும்.

எஸ்பிஐ ட்விட்டரில், 'உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பிலும் உங்களுக்கு சேவையை வழங்கும். பயணத்தின்போது உங்கள் கணக்கு இருப்பு மற்றும் வங்கி கணக்கு குறித்த மினி அறிக்கையை பெறலாம். எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு, பயனர்கள் +919022690226 என்ற எண்ணுக்கு 'ஹாய்' என்று தகவல் அனுப்பினால் போதும்.

மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!

எஸ்பிஐ வங்கி கணக்கு அறிக்கையைப் பெற, இந்தப் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

வழிமுறை 1: முதலில் SBI வாட்ஸ்அப் வங்கி சேவைகளை பெற உங்கள் கணக்கை பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இந்தச் சேவைகளுக்குப் பதிவுசெய்ய, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணிலிருந்து 917208933148 என்ற எண்ணுக்கு "WAREG A/c No" என்று SMS அனுப்ப வேண்டும்.

வழிமுறை 3: பதிவு முடிந்ததும், +919022690226 என்ற எண்ணுக்கு 'ஹாய்' என அனுப்பவும்.

வழிமுறை 4: அதன் பிறகு, "அன்புள்ள வாடிக்கையாளரே, எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்" என்று ஒரு செய்தியைப் பெறுவீர்கள்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்-

1. கணக்கு இருப்பு

2. மினி கணக்கு அறிக்கை

3. வாட்ஸ்அப் வங்கியில் பதிவை நீக்கவும்

தொடங்குவதற்கு உங்கள் கேள்விகளையும் தட்டச்சு செய்யலாம்.

படி 5: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க "1" என டைப் செய்யவும், மினி ஸ்டேட்மெண்ட் பெற "2" என டைப் செய்யவும். உங்கள் கணக்கு இருப்பு அல்லது மினி வங்கி கணக்கு அறிக்கை இப்போது WhatsApp-ல்  கிடைக்கும்.

இது தவிர, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எஸ்பிஐ கார்டு வாட்ஸ்அப் கனெக்ட் என்ற பெயரில் வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளையும் வழங்குகிறது. இந்த சேவையானது SBI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு விபரம், வெகுமதி புள்ளிகள், நிலுவையில் உள்ள இருப்பு, ஆகியவற்றை அறியவும் கிரெடிட் கார்டுக்கான பணம் செலுத்துவும் உதவுகிறது.

மேலும் படிக்க | வட்டி விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ..உயரும் EMI!

மேலும் படிக்க | உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News