செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்

Mars Transit: செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2022, 12:43 PM IST
  • செவ்வாய் கும்ப ராசியில் நுழைகிறார்.
  • வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும்.
  • தொழில் முன்னேற்றத்திற்கான யோகம் உண்டாக்கும்.
செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும் title=

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் ஏப்ரல் 7, 2022 அன்று சனி பகவானின் மகர ராசியில் நுழையப் போகிறார். செவ்வாய் மே 17, 2022 வரை இந்த நிலையில் இருப்பார். 

செவ்வாய் கிரகத்தின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். இந்த மாற்றத்தின் போது செய்யப்படும் முதலீடுகள் நன்மைகளைத் தரும். இது தவிர, சில பெரிய பொருளாதார நன்மைகளின் அறிகுறிகளும் உள்ளன. இருப்பினும், உறவுகளில் சவாலான நிலை ஏற்படலாம். ஆகையால் உறவுமுறைகளில் அதிகப்படியான கவனம் தேவை. 

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் செவ்வாயின் சஞ்சாரத்தால் நன்மை பெறுவார்கள். தொழில்-வியாபாரத்தில் புதிய உயரங்களை அடையலாம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படும்.

மேலும் படிக்க | ஏப்ரல் 13 குரு பெயர்ச்சி, இந்த 3 ராசியினரின் செல்வ நிலை மேம்படும் 

மிதுனம்
செவ்வாயின் சஞ்சாரத்தால் வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும். நிலம் மற்றும் சொத்துக்களால் லாபம் ஏற்படும். இதனுடன் தினசரி வருமானமும் அதிகரிக்கலாம். இருப்பினும், செவ்வாயின் இந்த ராசி மாற்ற காலத்தில், முதலீடு செய்வதற்கு முன் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சியின் போது ஓரளவு பண ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் பணப் பலன்கள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் உங்கள் பழக்க வழக்கங்களில் அதிக கவனமும் கட்டுப்பாடும் தேவை. வியாபாரத்தில் சிக்கிய பணம் மீண்டும் கிடைக்கும்.

கும்பம்
செவ்வாய் சஞ்சாரம் தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்களைத் தரும். விரும்பிய வேலை கிடைக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிகளுக்கு இன்று வேலை, வாழ்க்கை, குடும்பம் அனைத்திலும் அதிர்ஷ்ட மழை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News