12 ராசிகளில் ஒவ்வொரு ராசி உடையோருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதில், மிதுன ராசிக்காரர்கள் கணவனாக வந்தால் எப்படி நடந்து கொள்வர்? அவர்களிடம் உற்று நோக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..? இதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
மிதுன ராசிக்காரர்கள்:
மே 21 மற்றும் ஜூன் 20 க்கு இடையில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர், மிதுன ராசி உடையவராக இருப்பர். அவர்கள் புத்திசாலித்தனம், வசீகரம் மற்றும் அனைவரையும் நல்ல முறையில் நடத்துவதற்கு பெயர் பெற்றவர்கள். வாழ்க்கைத் துணையைத் தேடும் போது, இவர்களின் இந்த வகையான வசீகரமான குணங்களே அவர்களை உற்சாகமான தேர்வாக ஆக்குகின்றன. ஆனால் அவர்கள் எப்படி வாழ்க்கைத் துணையாக எப்படி செயல் படுவர்..?
மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் கண்டிப்பாக ஒத்து வராது..!
பொருந்திப்போகும்-பொருத்துப்போகும் தன்மை:
மிதுன ராசி உடைய ஆண்கள், தங்கள் உணர்வுகளையும் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த தயங்காதவர்களாக இருப்பர். திறமையாக பேசும் திறனை பிறப்பில் இருந்தே பெற்றவர்கள் இவர்கள். பேசுகையிலேயே இவர்கள் பேச்சில் இருக்கும் புத்திசாலித்தனமும் கதை சொல்லும் திறனும் வெளிப்படும். தங்கள் பார்டரிடம் எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அதை தயங்காமல் கூறிவிடுவர். இதுவே இவர்களின் திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை சிறக்க உதவுகிறது. அனைத்து வகை தரப்பினரிடமும் மிகவும் எளிமையாக ஒட்டிக்கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும். இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதுமையாக உணருவார்கள்.
காதல் நெருப்பை அணைய விட மாட்டார்கள்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். வெவ்வேறு துறை சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் அதையும் சலிக்காமல் கற்றுக்கொண்டு வல்லுநர்களாக விளங்குவர். இது, அவர்களின் வேலை அல்லது படிப்பு விஷயம் மட்டுமன்றி காதல் விஷயத்திற்கும் பொருந்தும். ஏதாவது ஒரு விஷயத்தை தன் பார்டனருடன் பேச வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அதை மிகவும் ஆழமாக பேசுவர். இதனால், இவர்கள் எந்த உறவில் இருந்தாலும் அது வலுவடையும்.
முதிர்ச்சியான காதலாக இருந்தாலும் இளமையாக வைத்திருப்பர்..!
மிதுன ராசி உடைய கணவன்மார்கள், தங்கள் காதலை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பர்.அவ்வப்போது தன் பார்ட்னரை செல்ல சண்டைகளால் சீண்டுவது, அவருடன் விளையாடுவது போன்ற செயல்களால் தங்களுக்குள்ளும் பார்ட்னருக்குள்ளும் இருக்கும் குழந்தை தன்மையை அழகாக வெளிப்படுட்துவர். அடிக்கடி தன் அன்புக்குரியவளுக்காக ஜோக் செய்து அவளை சிரிக்க வைக்க விரும்புவர். இதனால் இவரின் திருமணம் அல்லது காதல் வாழ்கையில் எப்போதும் புத்துணர்ச்சி பொங்கி வழியும்.
எல்லோருக்கும் பல தரப்பு வகையான ஆசைகள் இருப்பது போல, மிதுன ராசிக்காரர்களுக்கும் இருக்கும். இவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் நிலைத்தன்மை உடையதாக இருக்காதாம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தவும் இவர்கள்கள் சிரமப்படுவார்களாம். இவர்களுக்கு ஹாபு கூட ஒன்று இரண்டு என்றில்லாமல் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதனால் இவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். இப்படி, சில நேரங்களில் தங்களால் சமாளிக்க முடியாமல் தடுமாறும் போது இவர்களுக்கு உதவி தேவைப்படுமாம்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ