இலவசமாக அப்டேட் ஆகும் குழந்தைகளுக்கான ஆதார் கார்ட்: முழு விவரம் இதோ

Aadhaar For Kids: 5 வயது மற்றும் 15 வயதில், குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும். இந்த வயதில் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2022, 07:23 PM IST
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வழங்கப்படும் ஆதார் அட்டையின் நிறம் நீலமாகும்.
  • இது குழந்தை ஆதார் (பால் ஆதார்) என்று அழைக்கப்படுகிறது.
  • குழந்தைகளின் ஆதார் அட்டையை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்.
இலவசமாக அப்டேட் ஆகும் குழந்தைகளுக்கான ஆதார் கார்ட்: முழு விவரம் இதோ title=

ஆதார் அட்டை: நாடு முழுவதும் ஆதார் அட்டைகளை வழங்கும் நிறுவனமான யுஐடிஏஐ, நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்கள் ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஒருமுறை ஆதார் அட்டையைப் புதுப்பிக்காத குடிமக்கள் தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று UIDAI கூறியுள்ளது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இது தவிர, உங்கள் ஆதார் அட்டையில் கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்தால் அதற்கு ரூ.100 செலவாகும்.

5 மற்றும் 15 வயதில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்:

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வழங்கப்படும் ஆதார் அட்டையின் நிறம் நீலமாகும். இது குழந்தை ஆதார் (பால் ஆதார்) என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளின் ஆதார் அட்டையை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். 

5 வயது மற்றும் 15 வயதில், குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும். 5 வயது மற்றும் 15 வயதில், குழந்தையின் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

மேலும் படிக்க | வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி? 

ஆதார் அட்டையை புதுப்பித்து வைத்திருப்பதன் நன்மைகள்

ஆதார் அட்டையை புதுப்பித்து வைத்திருப்பதால் பல நன்மைகள் உள்ளன. ஆதார் அட்டை இல்லாமல் நமது முக்கியமான பல பணிகள் முழுமையடையாமல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதார் அட்டை என்பது நமது அடையாளச் சான்று மட்டுமல்ல, முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. 

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஆவண வடிவில் கொடுக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள வங்கிக் கணக்கின் விவரங்களில் உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவை உள்ளிடப்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், வங்கிக் கணக்கிலும் அந்த விவரம் தவறாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News