Lifestyle Tips In Tamil: இரவில் தூக்கம் வராதது தற்போது பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது. சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்திருக்காதது பலருக்கும் உடல்நலன் சார்ந்த பிரச்னை மட்டுமின்றி, மனநலன் ரீதியாகவும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. நீங்கள் தனிமையில் இருப்பவர் என்றால் தூக்கத்தை வரவழைப்பது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கும். அதிலும் கவலைகள், மன அழுத்தங்கள், மனதில் நிறைந்திருக்கும் அச்சங்கள் அனைத்தும் அந்த இருள் சூழ்ந்த நேரத்தில்தான் நமது மனதில் அலைமோதி தூக்கத்தை வரவிடாமல் தடுக்கும்.
காலையிலும் நமக்கு தனிமை, கவலை, அச்சம், மன அழுத்தம் என அனைத்தும் இருக்கும். ஆனால், காலையில் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதுவே, இரவில் மொத்தமும் அடங்கி அமைதி நிலவும் சூழலில்தான் அவை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அலையாக அலையாக எழுந்துவரும் எண்ணங்கள், தடுக்க முடியாத சிந்தனைகள் ஆகியவற்றால் தூக்கம் வருவதும் கடினமாகும். இதனால் பலருக்கும் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது. முன்னர் சொன்னதுபோல் இது உடல்நலன் ரீதியில் மட்டுமின்றி மனநலன் ரீதியிலும் தீவிர பிரச்னைகளுக்கு இட்டுச்செல்லும்.
சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தவும்
அந்த வகையில், இரவு நேரத்தில் உங்களின் மனதையும், மூளையையும் ஆக்கிரமித்திருக்கும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமானதாக மாற்றவும், உங்களின் தனிமையை போக்கி மன அமைதிக்குச் செல்லவும் சில நடைமுறைகளை பின்பற்றலாம். இந்த நடைமுறைகளை நீங்கள் உங்களின் அன்றாடத்தில் ஒரு பகுதியாக பழக்கமாக்கிக் கொண்டால் நிச்சயம் நீங்கள் தனிமையில், மன அழுத்தத்தில் வாடி தூக்கத்தை தொலைக்க மாட்டீர்கள். எனவே, இந்த நான்கு விஷயங்களை இரவில் தூங்க செல்வதற்கு முன் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | உங்கள் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது? உளவியலாளர் சொல்லும் எளிய குறிப்புக்கள்!
நான்கு முக்கிய விஷயங்கள்
- முதலில், படுக்கையறையை அமைதியான சூழலுக்கும், உங்களை கவலையில் ஆழ்த்தும் எந்தவொரு சூழலுக்கும் இட்டுச்செல்லாதவாறு அமைத்துக்கொள்வது நல்லது. மனதுக்கும், உடலுக்கும் அந்த இடம் அமைதியை தர வேண்டும், காற்றோட்டம் நன்றாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும். தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன் பளீர் வெளிச்சத்தை தவிர்த்துவிடுங்கள். மொபைல், லேப்டாப், கணினிகளை தவிர்த்துவிடுங்கள். இதனால், மனமும், உடலும் அமைதியை நிலையை அடையும்.
- தூங்குவதற்கு முன் காபி, டீ போன்று காஃப்பின் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இது உங்களின் தூக்கத்தை மேலும் சோதிக்கும். அதேபோல் இரவு தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே சாப்பிட்டுவிடுங்கள். அதுவும் குறைவாக சாப்பிடுங்கள். வயிறு நிறைய சாப்பிட வேண்டாம். இது உங்களின் செரிமானத்தை பாதிக்கலாம், தூக்கமும் கெடும்.
- படுக்கையில் நிதானமாக இருக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் அந்த நொடியில் உங்கள் சிந்தனையில் இருப்பதை டைரியில் எழுதவும். இதுபோன்று எழுதுவது உங்களை நோக்கிய சிந்தனைக்கு தள்ளும். கவனம் ஒரு விஷயத்தில் குவியும். எவ்வித சிதறலும் இன்றி தூக்கத்திற்கு உங்களின் மூளை தயாராகும்.
- இரவில் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக, 4-7-8 என்ற பிரபல மூச்சுப்பயிற்சியை நீங்கள் முயற்சிக்கலாம். அதாவது, மூச்சை நான்கு நொடிகளுக்கு உள்ளிழுத்துக் கொள்ளவும், மூச்சை 7 நொடிகளுக்கு அப்படியே வைத்துக்கொள்ளவும், அதன்பின் உள்ளிழுத்த மூச்சை 8 நொடிகளுக்கு மெதுவாக வெளியிடவும். இந்த பயிற்சியை செய்வதும் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இவை ஊடகத்தில் வெளியான தகவல்கள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | கனவுகளை நனவாக்க வேண்டுமா? யோசிக்காம ‘இந்த’ 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ