Valentine Day Sale 2023: வேலண்ட்டைன் டே தள்ளுபடி தொடங்கிவிட்டது காதலர்களே! தூள் கிளப்புங்க

Flipkart Valentine Day Sale 2023: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில் "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2023, 05:18 PM IST
  • காதலர் தினத்தை கொண்டாட தள்ளுபடி தரும் ஃப்ளிப்கார்ட்
  • ஐபோனில் மெகா தள்ளுபடி
  • கிஃப்ட் குடுத்து காதலை வளர்க்கலாமே!
Valentine Day Sale 2023: வேலண்ட்டைன் டே தள்ளுபடி தொடங்கிவிட்டது காதலர்களே! தூள் கிளப்புங்க title=

Flipkart Valentines Day Sale: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில்  "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம். காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தன்று காதலி/காதலர், கணவர்/மனைவிக்கு என்ன பரிசளிக்க வேண்டும் என்று யோசிக்கவே வேண்டாம், இந்த தள்ளுபடி சேல், உங்களுக்கு தேவையான எல்லாத் தகவல்களையும் தருகிறது.

ஆப்பிள் ஐபோன் முதல் ஏர் பேட் வரை, இந்தத் தயாரிப்புகளுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கிறது தெரியுமா? காதல் மயக்கத்தில் இருந்தாலும், காதல் பரிசுகள் தரவேண்டும் பாஸ்! ஒரு வார காதலர் தின கொண்டாட்டங்கள் நாளை ’ரோஸ் டே’-உடன் தொடங்கவுள்ள நிலையில், இன்று ஃப்ளிப்கார்ட் தனது காதலர் தின சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டது.அ தை பயன்படுத்தி காதலை அனுபவியுங்கள்.

மேலும் படிக்க | மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே! ’ரோஸ் டே” கொண்டாடலையா?

ஃப்ளிப்கார்ட் காதலர் தின தள்ளுபடி விற்பனைக்கு வங்கிகள் மூலம் பணம் செலுத்தினால் சலுகை கிடைக்கும். எந்த வங்கி எவ்வளவு தள்ளுபடி தருகிறது? தெரிந்துக் கொள்ளுங்கள். "Flip Heart Days" விற்பனையின் ஒரு பகுதியாக, Flipkart ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்..

இது தவிர, பிளிப்கார்ட் பே லேட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.500 மதிப்புள்ள கிஃப்ட் கார்டைப் பெறலாம்.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க போறிங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!

Apple iPhone 14: விற்பனையின் ஒரு பகுதியாக, Apple iPhone 14 ஐ ரூ.72,499க்கு வாங்கலாம். இது தற்போதைய விலையில் 9 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்பதோடு, வாடிக்கையாளர்கள் ரூ.23,000 வரையிலான பரிமாற்ற பலன்களையும் (எக்ஸேன்ஞ் ஆஃபர்) அனுபவிக்க முடியும்.

Apple iPad (9th Gen): இந்த iPad 11 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபேட் ரூ.29,990க்கு கிடைக்கிறது. பழைய சாதனத்தை மாற்ற விரும்புவோர் ரூ.17,500 வரை தள்ளுபடி பெறலாம்.

மேலும் படிக்க | Fake ChatGPT: இந்த செயலிகள் போலியானவை.. பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

மோட்டோரோலா G52: இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களுடன் வருகிறது. முதன்மை சென்சார் 50MP உடன் வருகிறது. செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி கொண்ட இந்த சாதனம் ரூ.12,999க்கு கிடைக்கிறது, அதாவது சுமார் 35 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ: ஒருவர் ஏர்போட்ஸ் ப்ரோவை 23 சதவீதம் தள்ளுபடியில் வாங்கலாம். Apple AirPods Pro இன் தற்போதைய விலை ரூ.19,999.

ஃப்ளிப்கார்ட்டைப் போலவே, அமேசானும் காதலர் தினத்தை முன்னிட்டு தயாரிப்புகளில் சில தள்ளுபடிகள் மற்றும் விற்பனைகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. காதலர் தினம் ’ரோஸ் டே’வுக்கு முன்பே களைகட்டிவிட்டது.

மேலும் படிக்க | ஆட்டோமேட்டிக் கார் வாங்க பிளாங்கா? ஒரு நிமிஷம் இந்த செய்தியை படியுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News