Saving schemes: தற்போது சேமிப்பின் தேவை அனைவருக்கும் புரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் சேமிப்பின் அவசியம் அதிகமாகி உள்ளது. புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு தங்கள் பணத்தை எப்படி சேமிப்பது என்று தெரிவதில்லை. நீங்கள் சமீபத்தில் வேலையில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ஏற்கனவே பணியில் இருந்தாலும் உங்களுக்காக பல சிறந்த முதலீட்டு திட்டங்கள் உள்ளன. நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில முதலீட்டு விருப்பங்களின் பட்டியல்:
நிலையான வைப்புகளில் முதலீடுகள் (Fixed Deposits)
நீங்கள் நிலையான வருமானம் அல்லது உங்கள் முதலீட்டின் மீதான நல்ல வருமானத்தை பெற விரும்பினால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது பிக்சட் டெபாசிட் ஆகும். முந்தைய தலைமுறையில் இருந்தே பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. தற்போதும் இது மிகவும் நம்பகமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். உங்களிடம் உள்ள பணத்தின் அடிப்படையில் FD விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் நிலையான வைப்புத்தொகையின் அடிப்படையிலும் நீங்கள் கடன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Budget 2024: NPS முதலீடுகளுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படலாம்..!!
நிலையான வைப்புத்தொகை இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டமாகும். பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கு வங்கிகளின் நிலையான வைப்புத் திட்டங்கள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வேலையைச் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தைப் பெறுவது போல, வங்கியின் இந்த FD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம். அதன் பெயர் நிலையான வைப்பு மாதாந்திர வருமானத் திட்டம்.
தொடர்ச்சியான வைப்புகளில் முதலீடுகள் (Recurrent Deposits)
தொடர்ச்சியான வைப்புத்தொகைகள், நிலையான வைப்புத்தொகைகளைப் போலவே தான் இருக்கும், ஆனால் இவை வழக்கமான இடைவெளியில் முதலீடு செய்யக்கூடியவை. இதன் மூலம் நீங்கள் FDல் செய்வது போல், உங்களிடம் உள்ள எல்லாப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யத் தேவையில்லை, ஆனால் உங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது முதலீடு செய்து கொள்ளலாம்.
தங்கத்தில் முதலீடுகள் (Gold Investment)
சந்தை நிலவரம் என்னவாக இருந்தாலும், தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் லாபமாகவே உள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் ஓரளவு நல்ல வருமானம் கொண்ட முதலீட்டை நீங்கள் விரும்பினால், தங்கம் உங்களுக்கான சிறந்த முதலீடாகும். ஏனெனில் தங்கத்தின் விலை அதிகமாகுமே தவிர ஒருபோதும் குறையப்போவது இல்லை.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு திட்டமாகும். பொது வருங்கால வைப்பு நிதி இந்தியாவில் மிகவும் பிரபலமான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும், இது காலப்போக்கில் உங்கள் பணத்தை அதிகப்படுத்துவதற்கு, வரி சேமிப்பு, வருமானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த PPF திட்டம் 1968ல் நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் தனிநபர்கள் சிறு சேமிப்புகளைச் செய்வதற்கும், சேமிப்பின் மீதான வருமானத்தை வழங்குவதற்கும் உதவுவதாகும். PPF திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் வட்டி விகிதங்களில் இருந்து உருவாக்கப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.
மேலும் படிக்க | Income Tax: உறவுகளுக்குள் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ