SBI YONO App மூலம் இலவசமாக, மிக எளிதாக உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யலாம்: Follow these steps!

வருமானத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் +91 9660-99-66-55 என்ற எண்ணில் அழைத்து இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், சிக்கல்களுக்கான தீர்வையும் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2020, 03:05 PM IST
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதில் உதவுகிறது.
  • SBI YONO App மூலம் இப்போது வருமான வரியை எளிதாக தாக்கல் செய்யலாம்.
  • இது குறித்து SBI சமீபத்தில் ட்வீட் செய்து தெரிவித்தது.
SBI YONO App மூலம் இலவசமாக, மிக எளிதாக உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யலாம்: Follow these steps! title=

புதுடில்லி: வருமான வரி தக்கல் செய்வதில் அனைவரும் இப்போது மும்முரமாக உள்ளனர். இந்த வேளையில், சிலர் தாங்களாகவும், சிலர் சில முகவர்கள் மூலமும் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர்.

இப்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதில் உதவுகிறது. SBI-யின் யோனோ செயலி மூலம் உங்கள் வருமான வரியை (ITR) இலவசமாக தாக்கல் செய்யலாம்.

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குனரான SBI தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் SBI வாடிக்கையாளர்கள் SBI Yono App மூலம் 2019-20 நிதியாண்டில் தங்கள் ITR-ஐ எளிதாக தாக்கல் செய்ய முடியும்.

SBI-யின் யோனோ செயலி மூலம் உங்களுக்கு “YONO-வில் Tax2Win உடன் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்யுங்கள். சேமிப்பும் கிடைக்கும், ITR-ரும் தாக்கல் செய்யப்படும்” என்று SBI இதற்காக ட்வீட் செய்து விளம்பரப்படுத்தியுள்ளது.

வருமானத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் +91 9660-99-66-55 என்ற எண்ணில் அழைத்து இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், சிக்கல்களுக்கான தீர்வையும் பெறலாம். அல்லது support@tax2win.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நீங்கள் உங்கள் பிரச்சனையைப் பற்றி எழுதி அனுப்பலாம்.

ALSO READ: Alert.. ATM-யில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.!

SBI YONO App மூலம் ITR தாக்கல் செய்ய இந்த வழிகளை பின்பற்றவும்:

Step 1: YONO SBI App-ஐ ஓப்பன் செய்து லாக் இன் செய்யவும்.

Step 2: ‘Shop and Order’-க்கு செல்லவும்.

Step 3: வரி மற்றும் முதலீட்டைக் (Tax and Investment) கிளிக் செய்யவும்.

Step 4: அங்கு காணப்படும் ‘Tax2Win’-ல் கிளிக் செய்து அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.

I-T இணையதளத்தில் வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்யுங்கள்.

வருமான வரி (Income Tax) வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in இல் நீங்கள் ஈ-ஃபைலிங்க் அகௌண்டை உருவாக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே தளத்தில் பதிவுசெய்திருந்தால், உங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய அடுத்தடுத்த செயல்முறைகளுடன் தொடரவும்.

வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது அனைவரது கடமையாகும். இதற்காக அரசாங்கமும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பல வசதிகளையும் செய்து தருகின்றன. 

ALSO READ: இனி ஆதார் அட்டை மூலம் ஷாப்பிங் செய்யலாம்; Paytm, Google Pay-யின் கதி என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News