PF Account: பாலன்ஸ் செக் செய்வது மிக எளிது, இதை மட்டும் செய்தால் போதும்

PF Account Balance:பிஎஃப் கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு, 2021-22 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.1% ஆகும். பிஎஃப்-இன் வட்டி விகிதம் இபிஎஃப்ஓ- ​​இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) மூலம் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 03:09 PM IST
  • அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்தத் திட்டங்களில் ஒன்று பிஎஃப் ஆகும்.
  • பிராவிடண்ட் ஃபண்டு, அதாவது பி.எஃப் மூலம், அரசு, வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
PF Account: பாலன்ஸ் செக் செய்வது மிக எளிது, இதை மட்டும் செய்தால் போதும்  title=

பிஎஃப் கணக்கு இருப்பு: அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பல நலத்திட்டங்களில் இபிஎஃப் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் மாத சம்பள வர்க்கத்தினரின் சேமிப்பு அதிகரிக்கிறது. அதே நேரத்தில், இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு, அவர்களது இருப்பு தொகைக்கான வட்டியும் வழங்கப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளில் வட்டியை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கிறது. 

பிஎஃப் கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு, 2021-22 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.1% ஆகும்.  பிஎஃப்-இன் வட்டி விகிதம் இபிஎஃப்ஓ- ​​இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) மூலம் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படுகிறது. வட்டி விகிதம் இந்த ஆண்டு ஜூன் மாதம் இபிஎஃப்ஓ ​​ஆல் அறிவிக்கப்பட்டது.

பிஎஃப் இருப்பு சரிபார்ப்பு

வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டவுடன் சந்தாதாரர் தனது பிஎஃப் கணக்கில் வட்டித் தொகையைப் செக் செய்யலாம். இதனுடன், அவரது கணக்கில் இதுவரை டெபாசிட் செய்யப்பட்ட தொகையையும் சரிபார்க்கலாம். பிஎஃப் கணக்கு இருப்பை பல வழிகளில் சரிபார்க்கலாம். பிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஆன்லைனில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி: அடிப்படை வருமான வரிச் சலுகை ரூ.5 லட்சமாக அதிகரிக்குமா? 

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்யும் செயல்முறை:

- எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை சரிபார்க்க விரும்பினால், EPFOHO UAN ENG என எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

- SMS இல் எழுதப்பட்ட கடைசி மூன்று எழுத்துக்கள் உங்களுக்கு விருப்பமான மொழியைக் குறிக்கின்றன. இங்கே ENG என்பது ஆங்கிலத்தைக் குறிக்கிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் மற்றும் குஜராத்தி என மொத்தம் 10 மொழிகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

- தமிழுக்கு TAM, இதில் ஹிந்திக்கு HIN, பஞ்சாபிக்கு PUN, குஜராத்திக்கு GUJ, மராத்திக்கு MAR, கன்னடத்திற்கு KAN, தெலுங்கிற்கு TEL, மலையாளத்திற்கு MAL, பெங்காலிக்கு BEN என அனுப்ப வேண்டும்.

- யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணில் (யுஏஎன்) பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும்.

- இபிஎஃப்ஓ உங்கள் கடைசி பிஎஃப் பங்களிப்பு, இருப்பு விவரங்கள் மற்றும் KYC விவரங்களை உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பும்.

மேலும் படிக்க | இத செய்யுங்கள்! பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News