Tax Free EPF: இந்த தொகைக்கு வட்டி செலுத்த வேண்டாம், விவரம் இதோ

Tax Free EPF: இ.பி.எஃப்-ல் முதலீடு செய்வது பல நன்மைகளை அளிக்கின்றது. இதனால், பணி ஓய்வுக்குப் பிறகு, பி.எஃப் சந்தாதாரரின் வாழ்க்கைக்கு நிதி உத்தரவாதம் கிடைக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 11:19 AM IST
  • பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்வது அவசியமாகும்.
  • ஓய்வு பெற்ற பிறகு, EPFO ​​இன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நீங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள்.
  • 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் ஓய்வூதிய நிதியிலிருந்து ஓய்வூதியத்தைப் பெறலாம்.
Tax Free EPF: இந்த தொகைக்கு வட்டி செலுத்த வேண்டாம், விவரம் இதோ  title=

Tax Free EPF: பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்வது அவசியமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சிறந்த ஓய்வூதிய திட்ட முதலீட்டு அணுகுமுறைகளில் ஒன்றை வழங்குகிறது. 

இ.பி.எஃப்-ல் (EPF) முதலீடு செய்வது பல நன்மைகளை அளிக்கின்றது. இதனால், பணி ஓய்வுக்குப் பிறகு, பி.எஃப் சந்தாதாரரின் வாழ்க்கைக்கு நிதி உத்தரவாதம் கிடைக்கின்றது. 

பி.எஃப் வட்டி விகிதம்

-EPF முதலீட்டுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- EPF வழங்கும் வட்டி கூட்டு வட்டி என்பது கூடுதல் நன்மை.
- எளிமையாகச் சொல்வதென்றால், முதலீடு வளர்ந்து பெரியதாகும்போது, ​​வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்.
- EPF இல் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான எந்தவொரு முதலீடுக்கும் வருமான வரியின் (Income Tax) 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.

ALSO READ |  PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ 

வருமான வரி கிடையாது

- ஒரு ஊழியர் தனது பதவிக்காலத்தில் பிஎஃப் தொகையை திரும்ப எடுக்கவில்லை என்றால், அவர் ஓய்வுபெறும் போது பல நன்மைகளைப் பெறுவார்.
- ஒரு ஊழியர் (Employees) தனது முழு பதவிக் காலத்திலும் பணத்தை எடுக்கவில்லை என்றால், அவரது தொகைக்கு நிலையான கூட்டு வட்டி விகிதம் கிடைக்கும், மேலும், அந்த தொகைக்கு வரி விலக்கும் அளிக்கப்படும்.

ஓய்வூதிய பலன்கள்

- ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன் பி.எஃப் தொகையை எடுக்கவில்லை என்றால், அந்த நபர் EPS-ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
- ஓய்வு பெற்ற பிறகு, EPFO ​​இன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நீங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள்.
- ஒருவர் பத்து வருடங்களுக்கு EPFல் இருந்து பணம் எடுக்காமல் இருந்தால், அவருக்கு ஓய்வூதியத்தின் பலன் தொடங்கும்.
- 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் ஓய்வூதிய நிதியிலிருந்து ஓய்வூதியத்தைப் பெறலாம்.

ALSO READ | EPFO முக்கிய செய்தி: இ-நாமினேஷன் செய்யலையா? இந்த நன்மைகள் கிடைக்காது!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News