பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலில் இலவச entry!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலை கட்டணமின்றி பார்வையிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Aug 12, 2019, 09:44 AM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலில் இலவச entry! title=

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலை கட்டணமின்றி பார்வையிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பக்ரா ஈத் அல்லது பக்ரித் என்றும் அழைக்கப்படும் ஈத் உல்-ஆதா இந்தியாவில் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. சந்திர ஆண்டின் கடைசி மாதமான து-அல்-ஹிஜ்ஜாவின் 10-வது நாளில் கொண்டாடப்படும் பக்ரித் இஸ்லாத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். 

அந்த வகையில் இப்பண்டிகை இந்தியாவில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தில் ஆக்ராவைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆச்சரியமான பரிசு ஒன்றினை அளிக்க தாஜ்மஹால் நிற்வாகம் முடிவு செய்துள்ளது.

அதாவது தாஜ்மஹால் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று மணி நேரம் இலவச அனுமதி அளித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை தினத்தன்று தாஜ்மஹாலில் சிறப்பு நமாஸ் வழங்கப்படுகிறது, இதில் பங்கேர்க பலரும் வருவது வழக்கம். இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை கருத்தில் கொண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், திங்கள்கிழமையன்று இந்த பாரம்பரிய தளத்திற்கு இலவசமாக நுழைய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி, தாஜ்மஹால் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக நுழைய அனுமதிக்கும். இந்த நேரத்தில் அனைத்து டிக்கெட் கவுண்டர்களும் மூடப்படும். இருப்பினும், உள் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் குறித்து கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் வைத்துக் கொள்ள, தாஜ்மஹால் வளாகத்திற்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் எதுவும் எடுத்துச்செல்லக்கூடாது.

காலை 10 மணிக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வழக்கமான நுழைவு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு கட்டணம் ஒருவருக்கு ரூ .50-ஆகவும், வெளிநாட்டினருக்கு ரூ .1,100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் 540 ரூபாய் நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும், அதே சமயம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள்.

Trending News