வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் வயிற்றில் (Garlic Benefits) அடிக்கடி  சாப்பிடுவத கூறி பலர் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் கட்டுரையில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2024, 11:20 PM IST
  • செரிமான அமைப்புக்கு நன்மைகளை வழங்கும்.
  • நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்களை அகற்ற உதவும்.
  • காசநோய் அறிகுறிகளை குறைக்க உதவும்.
வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் title=

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்: சிலர் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வாயு மற்றும் சில சிறிய நோய்களில், பூண்டு சாப்பிடுவது அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான காரணத்தை இன்று கூறுவோம். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்கும். இன்று இந்த கட்டுரையின் மூலம் பூண்டு சாப்பிடுவதற்கான சரியான வழியை உங்களுக்கு கூறுவோம்.

உங்க நாளை சில பூண்டு பற்களுடன் தொடங்குவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பூண்டு உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவி செய்யும். சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது. எனவே இப்போது இந்த கட்டுரையில் பூண்டின் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | வேகமாக உடல் எடையை குறைக்கும் ரகசியம்: இந்த உணவுகளை ஊறவைத்து சாப்பிடுங்க

வெறும் வயிற்றில் பூண்டு ஏன் சாப்பிட அறிவுறுதப்படுகிறது?
பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்க உதவும். பச்சை பூண்டை அதாவது பச்சையாக அப்படியே பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்ட அல்லிசின் (Allicin) என்கிற கலவை கிடைக்கிறது. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஈமமுனிட்டி அதிகரித்து பல நோய்களைத் தடுக்க உதவும். பூண்டில் ஏராளமான ஆன்டிபயாடிக்கள் நிறைந்துள்ளன, இதனால் உடலுக்கு அதிக பலன் கிடைக்கும். 

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் செரிமான அமைப்புக்கு நன்மைகளை வழங்கும். இது ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மேலும் பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்க உதவும்.

பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும், அதனுடன் நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்களை அகற்ற உதவும்.

காசநோய் போன்ற சளித்தொல்லைக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். தினந்தோறும் பூண்டு சாப்பிடுவது காசநோய் அறிகுறிகளை குறைக்க உதவும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுபு்புகள் சேருவதை பூண்டு தடுக்க உதவுகிறது. மேலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுக்க உதவும்.

மாதவிடாய் காலங்களில் சிறுநீரக பாதை நோய்த்தொற்று ஏற்படலாம், இதற்கு பெண்கள் தினமும் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவது நல்லது.

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் சளி மற்றும் கல்லீரல் செயல்பாட்டை குறைக்க உதவும்.

பூண்டு எப்போது சாப்பிடக்கூடாது?
ஒரு சில அதாவது அமிலத்தன்மை, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் பூண்டு சாப்பிடக்கூடாது. பூண்டு சாப்பிடுவது இரத்தத்தை மெல்லியதாக மாற்றுகிறது அதாவது பிளட் தின்னர் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | 2 வாரத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்க வேண்டுமா, அப்போ இப்படி பண்ணுங்க

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News