பிரேக்அப் பண்ண போறீங்களா? இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்!

காதல் உறவில் இருப்பவர்கள் உறவில் இருக்கும் பலர் சில சந்தர்ப்பங்களில் பிரேக்கப் செய்கின்றனர், இதனை சுமூகமான முறையில் காதல் துணைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2023, 11:05 AM IST
  • உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுங்கள்.
  • வீடியோ கால் மூலம் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை கூறலாம்.
  • உறவை முடிவுக்கு கொண்டுவர இருவரும் ஒருமனதாக முடிவெடுக்கலாம்.
பிரேக்அப் பண்ண போறீங்களா? இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்! title=

பிரேக்கப் என்கிற வார்த்தையே பலருக்கும் கேட்பதற்கே சற்று கடினமானதாக இருக்கும்.  அழகான தருணங்கள், அத்தனை எதிர்பார்ப்புகள், சந்தோஷங்கள், நிறைய காதலோடு தொடங்கிய ஒரு அழகான உறவில் திடீரென்று இடி விழுந்தது போல் வரக்கூடிய பிரேக்கப் மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.  இருவருமே ஒருமனதாக முடிவெடுத்து பிரேக்கப் செய்துவிட்டால் கூட பெரியளவில் வலி இருக்காது, அதுவே உறவில் ஒருவர் மட்டும் பிரேக்கப் செய்ய முற்படும்போது அது மற்றவருக்கு மரணத்தை விட கொடுமையான வேதனையை கொடுக்கும்.  இந்த வலியை வார்த்தையால் கூட விவரிக்க முடியாது, வாழும்போதே உயிர்போகும் வலியை அனுபவித்தவர்களும் இவர்கள் தான்.  இப்போது பிரேக்கப் செய்யபோவதை உங்கள் துணையிடம் சுமூகமான முறையில் தெரிவிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | Sperm Health Tips: உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்த வழிகள் என்ன?

1) எந்த விஷயமாக இருந்தாலும் நேருக்கு நேர் ஒருவரை பார்த்து பேசுவதே சிறந்த வழி.  கவனச்சிதறல் இல்லாமல் பேசக்கூடிய அமைதியான மற்றும் தனிப்பட்ட இடத்தை பேசுவதற்கு தேர்ந்தெடுக்கவும்.  நீங்கள் எதனால் இந்த உறவை முறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் துணையிடம் மரியாதையுடனும், அக்கறையுடனும் தெரிவியுங்கள்.

2) நேரில் பேச முடியாவிட்டால், வீடியோ கால் மூலம் அழைப்பை மேற்கொள்ளலாம், இதன் மூலம் நீங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நேருக்கு நேராக உரையாட வசதியாக இருக்கும்.

3) வீடியோ அழைப்பில் அவர்களை பார்த்து உங்களால் பேசமுடியாவிட்டால், தொலைபேசியில் குரல் அழைப்பை மேற்கொள்ளலாம்.  நீங்கள் இருவரும் பேசும்போது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

4) உங்கள் உணர்வுகளை நேரில் வெளிப்படுத்துவதற்கு சிரமமாக இருந்தால் கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.  உங்கள் துணையுடன் தொடர்புகொள்வதற்கு முன் உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் சேகரிக்க நேரம் எடுக்க வேண்டியிருந்தால் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

5) ஒரு உறவில் இருவருமே ஒருமனதாக முடிவெடுத்து உறவை முறித்துக்கொள்ளலாம், உறவை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் இருவரும் பரஸ்பர உடன்படிக்கைக்கு வரலாம்.  பிரிந்து செல்வதற்கு இது ஒரு மரியாதைக்குரிய மற்றும் சிறப்பான வழியாகும், இதில் இருவருக்கும் பெரியளவில் வலிகள் இருக்காது.

மேலும் படிக்க | திருமணமான பெண்களுக்கு ஜாக்பாட், இனி உங்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News