நாடு முழுவதும் இருக்கும் டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் நேரடியாக FASTag ப்ரீபெய்டு கணக்குகளில் உள்ள தொகையில் இருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்திவிட்டு செல்லலாம். வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் ஐடி-ஐ, சுங்கச் சாவடியில் இருக்கும் ஸ்கேனர் நொடிப்பொழுதில் ஸ்கேன் செய்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும்.
இதனால் சுங்கச்சாவடிகளில் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஓட்டுநர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இருக்கும் அனைத்து தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம். நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ETC-இயக்கப்பட்ட பாதையில் வாகனம் ஓட்டுவதற்கு முன், உங்கள் பாஸ்டேக் அக்கவுண்டில் போதுமான பணம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாகனம் சுங்கச் சாவடியில் அனுமதிக்கப்படாது.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் உடனே இதைச் செய்யுங்கள், இல்லையெனில் சிக்கல் தான்
பாஸ்டேக்கை நீங்கள் எளிமையாக ரீச்சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. நெட்பேங்கிங், யுபிஐ ஐடி மூலம் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். SBI YONO செயலியைப் பயன்படுத்தியும் உங்கள் FASTag ரீசார்ஜ் செய்யலாம். SBI YONO செயலி மூலம் FASTag ரீசார்ஜ் செய்வதற்கான வழிமுறை எப்படி? என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றவும்.
எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி?
* உங்கள் மொபைலில் YONO செயலியை திறக்கவும்.
*இப்போது உங்கள் அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
* YONO Pay என்பதை தேர்ந்தெடுக்கவும்
* பின் கீழே ஸ்க்ரோல் செய்து, Quick Payments என்பதன் கீழ் உள்ள FASTag-ஐ கிளிக் செய்யவும்.
* UPI மூலம் FASTag-ஐ ரீசார்ஜ் செய்வதற்கான ஆப்சன் அங்கே இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து நொடியில் பாஸ்டேக் கணக்கை ரீச்சார்ஜ் செய்யுங்கள்
மேலும் படிக்க | PF balance சரிபார்ப்பு: இபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ