அதிர்ச்சி! இந்திய உணவுகளுக்கு தடைவிதித்த எமிரேட்ஸ் நிறுவனம்!!

துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவு வகைளுக்கு தடை விதிப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது!

Last Updated : Jul 4, 2018, 05:41 PM IST
அதிர்ச்சி! இந்திய உணவுகளுக்கு தடைவிதித்த எமிரேட்ஸ் நிறுவனம்!! title=

துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவு வகைளுக்கு தடை விதிப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது!

சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை மெனுவாக வைத்து வழங்கிவருகிறது. 

இதை தொடர்ந்து, துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவுகளுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் அதிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்வது எங்கள் சேவைத் திறனை மேம்படுத்த துணைபுரியும். அத்துடன், பயணிகள் விமானத்தில் கொடுக்கப்படும் இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலால் இந்திய பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

Trending News