அமேசான், ஃப்ளிக்ஸ்கார்ட் 'போலி' ஒப்பனைப் பொருட்கள் விற்பனை செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் DCGI நோட்டீஸ் அனுப்பியுள்ளது....
இன்றைய கால கட்டத்தில் மக்கள் நிற்காமல் ஓடிகொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், தகலுக்கு தேவையான பொருட்களை கூட கடைகளில் பொய் வாங்க முடியாமல் ஆன்லைனில் வாங்கிவருகின்றனர். மக்களிடையே ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது Amazon, Flipkart மட்டும் தான் என்பது பலராலும் மறுக்க முடியாத உண்மை. இ-காமர்ஸ் நிறுவனங்களான Amazon, Flipkart உள்ளிட்டவை அன்மை காலமாக டெபிட் கார்டுகள் கீழ் 'இன்ஸ்டண்ட் கிரெடிட்' பெற்றுப் பொருட்களைக் கடனில் வாங்கலாம் என்று விளம்பரம் செய்து வருகின்றன.
இந்த முறையின் கீழ் அதிகபட்சம் 60,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களைச் சுலப தவணை முறையில் கடனாக வாங்க முடியும் என்றாலும் அதனைச் செய்யப் பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 5, 6 ஆம்தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருந்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தினார்கள். போலி மற்றும் கலப்பட ஒப்பனைப் பொருள்களை விற்பனை செய்வதாகக்கூறி Amazon, Flipkart ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் (DCGI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு பத்து நாள்களுக்குள் உரிய பதில் அளிக்கத்தவறினால் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போலித் தயாரிப்புகளில், இறக்குமதி செய்யப்பட்ட பிரான்டட் நிறுவனத் தயாரிப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் நடத்திய சோதனையில், உரிய அங்கீகாரம் பெறாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகளும், பதிவுச் சான்றிதழ் இல்லாத இறக்குமதிப் பொருள்களும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், தரச்சான்றளிக்கும் பிஸ் (BIS) நிறுவனத்தால் ஏற்கப்படாத மூலப்பொருள்களின் சேர்க்கையால் தயாரிக்கப்பட்ட பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உரிய உரிமம் இல்லாமலும், தவறான மூலப்பொருள்களை கொண்டும் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற, போலியான பொருள்களை விற்பனை செய்வதும், விநியோகம் செய்வதும் டிரக்ஸ் & காஸ்மெட்டிக்ஸ் ACT 1940-ன் படி தண்டனைக்குரிய சட்டம் என்பதை இந்த ஆன்லைன் நிறுவனங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.