Dream 11 Unplugged : அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து, குடும்பத்தோடு வெளிய வந்திருக்கும்போதுதான் வேலை தொடர்பாக 'மிக முக்கியமான' செல்போன் அழைப்பு வரும். இல்லையென்றால், வேலை தொடர்பான மெசேஜ் அல்லது மின்னஞ்சல்கள் என ஒருவரை மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்கள் நடக்கும்.
ஒரே ஒரு போன் கால் உங்களின் விடுமுறை மனநிலையையே சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதால், இந்திய நிறுவனம் ஒன்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சிறப்பான திட்டத்தை கொண்டவந்துள்ளது. இதன்மூலம், அந்த நிறுவனத்தில் பணியாளர்கள் நிம்மதியாக விடுமுறையை கொண்டாடுவது உறுதி செய்யப்படும்.
விளையாட்டில் பான்டஸி வகை போட்டிகளை நடத்தும் Dream 11 என்ற இந்திய நிறுவனம்தான் இந்த பிரச்னை சார்ந்து,"Dream 11 Unplug" என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளார். இந்த விதிமுறை மூலம், அந்த ஒரு பணியாளர் ஒரு வாரம் முழுவதும் விடுப்பு எடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல், மின்னஞ்ச்சல், வாட்ஸ்அப், குரூப் சாட்கள் என அனைத்து வகையிலும் அலுவலகத்தில் இருந்து தொடர்பற்று இருக்கலாம்.
இந்த பாலிசி குறித்து Dream 11 தனது LinkedIn பக்கத்தில்,"நாங்கள் விடுப்பில் உள்ள எங்கள் பணியாளரை தொடர்புகொள்வதில் முழுவதுமாக விடுபட்டுவிடுவோம். வாட்ஸ் அப், மின்னஞ்சல் என அனைத்திலும் இருந்தும். அவர் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருப்பார். இதனை எதற்கு செய்கிறோம் என்றால் தப்பித்தவறி கூட எங்களின் பணிசார்ந்த தகவல்கள் விடுமுறையில் இருக்கும் பணியாளரிடம் கொண்டு செல்லப்படக்கூடாது என்பதற்குதான்" என குறிப்பிட்டுள்ளது.
"ஏனென்றால், அவர்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழிப்பதோ அல்லது தனியாக விடுமுறை ரசிப்பதோ எவ்விதத்திலும் கெடுக்கக்கூடாது ஏனென்றால், ஒருவேளை அப்படி கெட்டுவிட்டால் அவர்களின் ஒட்டுமொத்த மனநிலை, வாழ்க்கை தரம், பொதுவாக அவரின் வேலைத்திறன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என நம்புகிறோம்" என மேலும் கூறப்பட்டுள்ளது.
டிரீம் 11 நிறுவனர்களான ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் ஆகியோர், "UNPLUG" காலத்தில் வேறொரு பணியாளரை யாரேதும் வேலை செய்து தொடர்பு கொண்டால், அவருக்கு சுமார் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் தலா 1 வாரம் நீண்ட விடுமுறை எடுக்க வசதியளிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ