இடுப்பு கொழுப்பு குறைய யோகாசனங்கள் : இடுப்பைச் சுற்றிக்கும் கொழுப்பு சதையானது உங்களின் தோற்றத்தைக் கெடுக்கலாம், அதேபோல் உடல் எடையால் நமது உடலில் பல சிக்கலான நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இடுப்புப் பக்கத்தில் உள்ள அசிங்கமான கொழுப்பைக் குறைக்க நீங்கள் சில எளிய யோகாசனங்களை செய்து முயற்சிக்கலாம். அத்தகைய சில யோகாசனங்களைப் பற்றி தான் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம், இதன் மூலம் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை சுலபமாக குறைக்கலாம். இந்நிலையில் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்கும் யோகாசனங்கள் எவை என்று பார்ப்போம்.
உத்தனாசனம்: இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பைக் குறைக்க, உத்தனாசனம் மிகச் சிறந்த யோகா பயிற்சியாகும். இதற்காக, யோகா பாயில் முதலில் அமர்ந்துக் கொள்ளுங்கள், பின்னர் இரண்டு கால்களையும் லேசாக விரித்து வைத்தபடி தரை விரிப்பின் மீது நில்லுங்கள். இரண்டு கைகளையும் காதை ஒட்டினால் போல வைத்து மேல் நோக்கி தூக்குங்கள். இப்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்ட படியே குனிந்து கால்களை வளைக்காமல் கால் பாதங்களைத் தொடவும். 20 விநாடிகள் இதே நிலையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
ஹலாசனம்: யோகாசனங்களில் ஹலாசனம் சற்று கடினமான, அதே சமயம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஆசனமாகும். இதற்கு முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும். * பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம்.
பாதஹஸ்தாசனம்: பாதஹஸ்தாசனம் பயிற்சி இடுப்பு கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, முதலில் நேராக நிற்க வேண்டும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர தூக்க வேண்டும். மூச்சை வெளியே விட்டபடி கீழே குனிந்து கால்விரல்களை தரையை தொடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உள்ளங்கைகள் கால் பாதங்களின் அடியில் வைத்தோ அல்லது கைவிரல்கள் கால் விரல் நகங்களை பிடித்தோ இருக்க வேண்டும். இந்த நிலையில் சாதாரணமாக மூச்சு விட்டபடி இருபது விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெதுவாக நிமிர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் இதே போல் செய்ய வேண்டும். தினமும் 3 முதல் 5 முறை வரை இதை செய்துவரலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ