DigiLocker: கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது. டிஜிலாக்கர் சேவைகள் இப்போது வாட்ஸ்அப் மூலம் MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.உங்கள் DigiLocker கணக்கை அணுகுவதை எளிதாக்குவதற்கு அரசாங்கம் WhatsApp உடன் இணைந்து சேவைகளை வழங்குகிறது. உங்கள் பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த வசதியை பெறுவதற்கு, உங்கள் தொடர்புகளில் +91-9013151515 என்ற எண்னை MyGov ஹெல்ப் டெஸ்க் என்ற பெயரில் சேமித்து, அதை வாட்ஸ்அப்பில் தேடவும். DigiLocker, Namaste அல்லது Hi என டைப் செய்து சாட்போட்டைச் செயல்படுத்தியதும், சாட்போட் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அப்ஷன்களை காண்பிக்கும். இப்போது உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இருக்கிறதா என்று கேட்டால், ஆம் என்பதைக் கிளிக் செய்து, டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
DigiLocker சேவையை ஏற்றுக்கொள்வதற்கு முன், நீங்கள் தனியுரிமைக் கொள்கையை கவனமாகப் படித்து, அதை ஏற்றுக் கொள்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், கோரிக்கைக்கு ஏற்ப, உங்கள் DigiLocker கணக்கை இணைக்க மற்றும் அங்கீகரிக்க உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் நீங்கள் OTP ஐப் பெறுவீர்கள். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை ஏற்கவும் பட்டியலிடவும் அதை உள்ளிட வேண்டும்.
மேலும் படிக்க | இலவச நெட்பிளிக்ஸ்! ஜியோவின் சூப்பரான OTT பிளான்...!
இறுதியாக, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஆவணத்தை கிளிக் செய்யவும், அந்த ஆவணம் உங்கள் WhatsApp வழியாக பதிவிறக்கம் செய்யப்படும். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, உங்களின் முக்கியமான ஆவணங்களை அணுகுவது முன்னெப்போதையும் விட எளிதானதாக இருக்கும். உங்கள் DigiLocker கணக்கை அணுகுவதைத் தவிர, பயனர் மொபைல் பயன்பாடு மூலம் MyGov ஹெல்ப் டெஸ்கையும் அணுகலாம். இதன் மூலம் முக்கியமான அரசாங்க சேவைகளை அணுகுவதையும் அந்த உதவியைப் பெறுவதையும் இன்னும் எளிதாகிறது.
மேலும் படிக்க | Vi அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூ.401 திட்டம்! இத்தனை சிறப்பம்சங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ